Wednesday, March 30, 2011

உள்@ராட்சி சபைகளை வலுப்படுத்த சட்டதிருத்தம்

Wednesday, March 30, 2011.
விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள். மக்களின் ஆணையை மதித்து அதனைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்றுக் காலை 10.07 மணிக்கு சுபநேரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 205 உள்ளூராட்சி சபைகளை ஆளும் ஐ. ம. சு. மு. யும், அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீல. மு. கா. 4 உள்ளூராட்சி சபைகளையும், தேசிய காங்கிரஸ் 2 சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு உள்ளூராட்சி சபையுமாக மொத்தம் 212 உள்ளூராட்சி சபைகளை ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவற்றின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும், பிரதித் தலைவர்களாகவும் இப்போது சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளுகின்ற உங்களுக்கு நான் முதலில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மக்களுக்காக சேவை செய்யப் புறப்படுகின்ற நீங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவற்றை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என்பன தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் இங்கு தெளிவுபடுத்தினார்கள். நாட்டு மக்கள் சுமார் இரு தசாப்தங்களாக எமக்குத் தொடராக ஆணை வழங்கி வருகின்றார்கள். அதுவும் எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் மத்தியில் மக்கள் எமக்கு ஆணை வழங்குகின்றார்கள். எதிரணியினர் எம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை சிறிதளவேனும் நம்ப நாட்டு மக்கள் தயாரில்லை. அவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள். இதனை நன்குணர்ந்து தான் மக்கள் எமக்கு தொடர்ந்து ஆணை வழங்குகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் மட்டும் தான் எனக்கு சேறு பூசினர். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் எதிர்க்கட்சிகளது சேறு பூசுதல்களுக்கு முகம் கொடுத்தீர்கள். அதே போல் விருப்புவாக்குக்காக உட்கட்சிக்குள்ளும் சேறுபூசல்களை எதிர்கொண்டீர்கள். அவ்வாறான சேறு பூசல்களுக்கும் அப்பால் மக்கள் எம்மீதும் ஐ. ம. சு. மு. மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துத்தான் ஆணை வழங்கியுள்ளார்கள். ஐ. ம. சு. மு. யை அமோக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். ஆகவே மக்களின் ஆணையை மதித்து நடக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அவர்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்களது கடமையாகும். எதிரணியினர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசைக் கவிழ்க்கவே மக்களிடம் ஆணை கோரினர். இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையினால் தான் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டோம். இத் தேர்தலில் எதிரணியினரின் அதிக உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் எனச் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாட்டு மக்கள் வயிற்றைப் பார்க்கவில்லை. எதிரணியினர் கூற்றுக்களை நம்பவில்லை. மாறாக அவர்கள் எதிர்பார்த்திராத அமோக வெற்றியை எமக்குத் தந்திருக்கின்றார்கள். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் இது. இந்தத் தேர்தலில் எமக்குக் கிடைக்கும் வெற்றி தாம் அரசுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கும் பிரசாரங்களுக்கு வலு சேர்க்கும் என்றும் யுத்த நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றும் எதிரணியினர் எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நாட்டு மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். நாட்டு மக்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும், ஐ. ம. சு. மு. யையும், உங்களையும் நம்பித்தான் இத் தேர்தலில் ஆணை வழங்கியுள்ளார்கள். நீங்கள் இந்த ஆணையை மதித்து நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் வாழ்பவர்கள் நீங்கள். கிராமத்தையும் நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பே. ஜனாதிபதி, அரசாங்கம், மாகாண சபை, மற்றும் மக்கள் என சகல தரப்பினரும் உங்களுடன் இருக்கின்றனர். ஆகவே கிராமத்தையும், நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்வது கஷ்டமான காரியமாக இருக்காது. நாம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்யவென முப்பது மில்லியன் ரூபாவை ஒதுக்கினோம். ஆனால் ஒருசில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய வர்கள் இந்நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. இந்த நிலை நீடிக்கக் கூடாது. மக்கள் குப்பை கூளங்களுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள் அல்லர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். அதேநேரம் நீங்கள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாக செயற்பட வேண்டும். அப்போதுதான் நீங்கள் கூறுவதையும் மக்கள் ஏற்று செயற்படுவார்கள். விருப்பு வாக்குக்காக சண்டை, சச்சரவில் ஈடுபடுவதை இந்த சந்தர்ப்பத்தோடு கைவிடுங்கள். இதன் பின்னரும் அது நீடிக்கக் கூடாது. சகலரையும் ஒனறிணைத்துக் கொண்டு உங்களது கிராமத்தையும், நகரத்தையும் மேம்படுத்தும் பணியை ஆரம்பியுங்கள். நாம் விரைவில் உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம். அதன் பின்னர் விருப்பு வாக்கு சண்டையில் நீங்கள் ஈடுபட நேராது. இச்சட்டம் நிறைவேற்றப் பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் சட்டத்திடம் இருக்கும். தலைவர்களுக்கும், உப தலைவர்களுக்கும், பொறப்புக்கள் சட்டப்படியே வழங்கப்படும். தற்போதைய ஏற்பாடுகளின்படி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. காசோலைகளுக்குக் கையெழுத்திடும் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. இது சில சமயம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை சிறை செல்லக்கூட வழி செய்துவிடக் கூடிய அச்சம் நிலவுகிறது. இந்த விடயத்திலும் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளோம். காசோலைகளுக்கு அதிகாரிகள் கையெழுத்திடும் முறை கொண்டுவரப்படும். அது நிர்வாகத்தை வலுப்படுத்தவும் வழி செய்யும். இதேநேரம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும், கட்சியின் தொகுதி மட்ட, மாவட்ட மட்ட அமைப்பாளர்களுக்கிடையில் நெருக்கமான உறவு இருப்பது அவசியம். இதனைப் பேணவேண்டியதும் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உபதலைவர்களின் பொறுப்பாகும். அத்தோடு கட்சியோடும் நெருங்கிச் செயற்படுவதும் அவசியம். இதனூடாக எமது கட்சியைப் பிரதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முடியும். இந்த விடயத்திலும் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார். இவ்வைபவத்தில் பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, ஏ. எல். எம். அதாவுல்லா, ரிஷாட் பதியுத்தீன், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, கெஹலிய ரம்புக்வெல்ல அனுர பிரியதர்ஷன யாப்பா, டொக்டர் ராஜித சேனாரட்ன, ஏ. எச். எம். பெளஸி, நிமல் சிறிபால டி. சில்வா, பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், பiர் சேகுதாவூத், மேல் மாகாண ஆளுநர் எல். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் வி. இராதாகிருஷ்ணன், ஏ. எச். எம். அஸ்வர், ஹுனைஸ்பாரூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive