
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர்.
மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியூள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 46 மீனவர்கள் 13 படகுகளுடன் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment