Monday, September 20, 2010

வவூனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் நிர்மாணிக்கும்!

Monday, 20 September 2010
வவூனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவூனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவூனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவூள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவூம் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவூனியா மாவட்டத்தில் குடியேறியூள்ள தெரிவூ செய்யப்பட்ட 2இ900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியூதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவூம் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவூ செய்யூம் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவூகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவூ செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவூம் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive