Sunday, July 4, 2010

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு தேவைப்படுவது-- முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்,

Sunday, July 4, 2010
அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று இணைந்த வட கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,.

அதிகாரப் பரவலாக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கும் பட்சத்தில் அதில் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் விடயங்களை திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறனுடைய நிபுணர்கள், மேலும் சில அரசியல் தலைவர்களை உள்ளடக்கி அந்த ஆணைக்குழுவை உருவாக்குவதன் மூலம் இப்பொழுது அரசியல் யாப்பின் தாகமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை எப்படி சிறந்த முறையில் அதை நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானித்து அந்த தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுகின்ற பொழுது முதற்கட்டமாக/ முதற்படியாக 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயத்தின் ஒரு செயன்முறைக்கு உயிராக மாற்றலாம். ஏனென்றால் இந்த அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றி பேசி, பேசி அல்லது அதைப் பற்றிய நாடாளுமன்ற குழு அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையிலான குழு என்ற கடந்த 20 வருடங்களாக இவ்வாறு மங்கள முனசிங்க கமிட்டி தொடக்கம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி என காலம்போய் விட்டது..

இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த 13 ஆவது திருத்தத்தை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றுவதென்று அதை தீர்மானித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக இந்த 13 ஆவது திருத்தத்தையே எப்படி திருத்துவது 13 ஆவது திருத்தத்திற்கு மேலான, அதிகார பரவலாக்க வேலையை எப்படி வழங்குவது என்றவிடயங்களை அரசியல் கட்சிகள்தீர்மானித்துக் கொள்ளலாம். அதை எதிர்காலத்தில் நடைமுறைக் கொள்ளலாம்..

இரண்டாவதாக இப்பொழுது தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் அகதிளாகி போனவர்களின் மறுவாழ்வு, புனர்வாழ்வு இந்த 30 வருட யுத்தத்தினால் அழிந்து போய் கிடக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுடைய புனரமைப்பு, அதாவது அதனுடைய உட்கட்டமைப்புகள் அவற்றினுடைய வர்த்தகம், அதனுடைய பொருளாதாரம் ஆகியவற்றினுடைய தனிப்பட்டவர்களின் வீடுகள், ஏனைய கட்டுமானங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் வெறுமனே அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் மட்டும் தங்கியிருக்காமல் அதற்கு உரிய வகையில் இருப்பதாகவோ அல்லது செயற்படக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவோ காணப்படவில்லை. ஆகவே அரசாங்கம் உடனடியாக புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஒரு திறமை வய்ந்த அல்லது ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தங்கி நேரடியாகவே அந்த பிரதேசங்களைப் பார்வையிட்டு அபிவிருத்திகளை திட்டமிட்டு அந்த அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்..

ஏனென்றால் இவ்வாறான சேவை மக்களோடு அந்த பிரதேசத்தோடு இருந்து செயற்படுகின்ற நிபுணர் குழு இல்லாமல் அரசாங்கம், கொழும்பிலிருந்து சில விடயங்களை தீர்மானிப்பதும் பாரம்பரிய அரசாங்க கட்டமைப்பினூடாக செயற்படுவதன் மூலம் அது செயலில் கூடியதாக இல்லை என்பதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். எத்தனையோ விதமான தடைகள் அந்த அமைப்பிலே காணப்படுகின்றன. மேலும் இந்த நிர்வாகங்கள் புலிகள் இருந்த கால கட்டத்தில் ஒரு பிழையான போக்குகளுக்கு அவை செயற்படுத்தப்பட்டதனால் அந்த போக்குகள் இன்றைக்கும் தொடருகின்றன. நிலைமைகளே அந்த நிர்வாக அமைப்பில் காணப்படுகின்றது. ஆகையால் இந்த நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை அந்த வொரு நிர்வாக அமைப்பில் தங்கியிருக்காமல் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கெள்வதற்கென ஒரு நிபுணர்கள் குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமித்து செயற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். என்னுடைய ஆலோசனையாகும் என்றும்கூட அதனை கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive