Saturday, April 17, 2010

மீள் வாக்களிப்புக்கு நாவலப்பிட்டியில் தயார் நிலை

Saturday, 17 April 2010
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 400 அதிகாரிகள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி கொழும்பில் இருந்து மீள் வாக்களிப்பு இடம் பெறவுள்ள பகுதிகளுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 37 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெற்று, வாக்கு எண்ணும் பணிகள் கண்டி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

மீள் வாக்களிப்பு இடம்பெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நாவலப்பிட்டி தொகுதியில் 37 வாக்குச்சாவடிகளில் 50 ஆயிரத்து 837 பேர் வாக்களிக்க உள்ளனர். நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் பின்வரும் வாக்களிப்பு நிலையங்களில் மீள் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

பார்கேப்பல் தமிழ் வித்தியாலயம் ,வெஸ்டோல் தமிழ் வித்தியாலயம், டெம்பல்ஸ்டன் தமிழ் வித்தியாலயம், நாவலப்பிட்டி மத்திய கல்லூரி பிரிவு – 1 ஆண்கள் , நாவலப்பிட்டி மத்திய கல்லூரி பிரிவு – 2 பெண்கள் ,தொலஸ்பாகை கனிஷ்ட வித்தியாலயம் ,அலுகொல்ல கனிஷ்ட வித்தியாலயம் ,படிதலாவ கனிஷ் கனிஷ்ட வித்தியாலயம், சேனாதிகாரி தேசிய பாடசாலை ,கெமுனுபுர கனிஷ்ட வித்தியாலயம் , வட்டபாத்த கனிஷ்ட வித்தியாலயம் ,இவல் கொல்ல கனிஷ்ட வித்தியாலயம் , பெல்லப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு – 1 – 2 , பெல்லப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு – 11 ,கிராவுல்ல மகா வித்தியாலயம் பிரிவு - 1, கிராவுல்ல மகா வித்தியாலயம் பிரிவு – 11 ,தெலி உன்ன ஜனபதய கனிஷ்ட வித்தியாலயம் ,தெனி உன்ன கனிஷ்ட வித்தியாலயம் ,எம்.எஸ்.அலுத்கமகே மகா வித்தியாலயம் ,ஹலாகம தொழிற்பயிற்சி நிறுவனம் ,உலப்பனை மத்திய கல்லூரி ,பத்துனுபிட்டிய மகா வித்தியாலயம் ,வெரலுகஸ் இன்ன கனிஷ்ட வித்தியாலயம் ,வரக்காவ கனிஷ்ட வித்தியாலயம் ,கடுகஞ்சேனை கனிஷ்ட வித்தியாலயம் ,றொசல்ல ஹைட்றி கனிஷ்ட வித்தியாலயம் ,மீப்பிட்டி தொழிற்பயிற்சி நிலையம் ,அலுத்கம பௌத்த ஆலய மண்டபம் ,ஸ்ரீதர் தர்மரத்ன வித்தியாலயம் ,கலபொட தமிழ் வித்தியாலயம் ,இங்குறு ஓயா கனிஷ்ட வித்தியாலயம் ,கதிரேசன் மத்திய கல்லூரி ,அனுருத்த மகா வித்தியாலயம் ,நாவலப்பிட்டி பெண்கள் கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு - 1 , நாவலப்பிட்டி பெண்கள் கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு - 11 .
இந்த வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive