Saturday, April 17, 2010

ஊவா மாகாணப் பாடசாலைகளில் தமிழ்மொழிப்

Saturday, 17 April 2010
கிழக்கு மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடத்துறையினை மேம்படுத்துவதற்குக் கல்வியமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் மொழி பாட போதனையின்போது தற்போது எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன்மூலம் பாடத்துறையினை விருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் வலையங்களின் தமிழ்மொழிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாகக் கல்வியமைச்சின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாடசாலை நூலகங்களைத் தமிழ் மொழி விருத்திக்காகப் பயன்படுத்துதல், மாணவர்களின் வாசிப்புத் திறனை விருத்தி செய்தல், தமிழ் மொழி மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் என்பவை தொடர்பாக இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியைத் தெரிவுசெய்யும் முறைபற்றியும், தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்ச்சிகளில் பாடசாலைகளின் பங்களிப்பினை அதிகரிப்பது தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive