Sunday, March 28, 2010

வெளிச்சம்’ மாத வெளியீடு இலண்டன் EPIC நிலையத்தினரால் வெளியிடப்பட்டது

Sunday, March 28, 2010
கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகள, சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் மாத வெளியீடு இலண்டன் EPIC (ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம்) நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.
ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம் இலண்டனிலிருந்து வெளிச்சம் என்ற பெயரில் 4 பக்கங்களை கொண்ட மாத செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றய அரசியல் நிலவரங்களை குறித்த கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக மாசி மாதத்திற்கான முதல் வெளியீடு வெளிவந்துள்ளது.
இடதுசாரிகளின் ஒற்றுமை இன்றய அவசியம் என்ற தலைப்பில் திரு லோகநாதன் அவர்களுடைய கட்டுரை தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையுடையவர்களும் இடதுசாரிகளும் இன்றய நிலையில் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் கருதி நேரம் கடத்தாமல் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருப்பது தேவையான ஒன்றாக உள்ளது. புதுமாத்தளனில் தொலைத்ததை ஐரோப்பாவில் தோண்டுவதா? என்ற ஆதவனின் கட்டுரை, ஐரோப்பாவிலும் கனடாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற என்ற பாதாகையை சுமந்து மக்களை ஏமாற்றும் பொழுது பொக்குக்காரர்களின் நாடியை பிடித்து கோடிட்டுக்காட்டியுள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் என்ற தலைப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு, மற்றும் புலிப்பிரமுகர்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம செய்தார்கள் என்பதையும் இப்பிரச்சாரங்களின் உள்நோக்கம் வெறுமனே சுயநலமான வெறும் எதிர்ப்புவாத போக்கேயொளிய தமிழ் மக்களின் நலன்களிலிருந்து சிந்திப்பதாக இல்லாததை வெளிப்படுத்தியுள்ள கட்டுரையாக பல விபரண கருத்தாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும் கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகளும் சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் போன்ற ஆக்கங்கள் மென்மேலும் பல நல்ல விடயங்களை சுமந்துவரவேண்டும். வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

Followers

Blog Archive