 Wednesday, November 24, 2010
Wednesday, November 24, 2010தமது பதவியினை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாது மக்களுக்குப் பணியாற்றுமாறு ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தமது பதவியினை இருக்கைகளுடன் மட்டுப்படுத்தாது நடைமுறை ரீதியிலும் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் அறிவுரை வழங்கினார்.
அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.
அதேபோன்று இந்த நாட்டின் அரச சேவைகள் பற்றித் தமக்குப் போதியளவு புரிந்துணர்வு இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி தம்மை எந்தவொரு அதிகாரியாலும் ஏமாற்ற முடியாதெனத் தெரிவித்தார்.
 
 
No comments:
Post a Comment