Sunday, June 27, 2010

யாழ்பாணத்தில் நடைபெற்ற அரசியல் கருந்தரங்கில் வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள்களின் பதில்கள்,

Sunday, June 27, 2010
அரசியல் கருந்தரங்கில் வரதரின் பதில்கள்

கேள்வி: இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட நீங்கள் தொடர்ந்தும் அந்த மாகாண சபையை முன்னெடுக்க முடியாத நிலையில் ஈழப் பிரகடனம் ஒன்றைச் செய்தீர்கள்? இது தொடர்பில் நீங்கள் விளக்க முடியுமா?

பதில் : தனிஈழ விடுதலைப் போராட்டம் என்ற கருத்தோடு 1987ற்கு முன் செயற்பட்டு வந்த நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை உருவாக்குவதற்கு இந்தியா முன்முயற்சி எடுத்து அதன் பயனாக இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் உருவானது. தமிழர்களின் போராட்டத்தில் ஏற்பட்டிருந்த பலவீனங்களையும் சர்வதேச ரீதியாகவும் தென் ஆசிய பிராந்திய ரீதியாகவும் நிலவிய நிலைமைகளைப் தெளிவாகப் புரிந்து கொண்ட நாம் இந்திய இலங்கை சமாதான உடன்பாட்டின் ஊடாக ஓர் அரசியல் தீர்விற்கு ஒத்துழைத்தோம். அதற்காகப் பெரும் தியாகங்களையும் எமது கட்சியினர் செய்ய வேண்டியிருந்தது. இலங்கை அரசாங்கம் மாகாண சபைக்குரிய ஒத்துழைப்பை வழங்காது மட்டுமல்லாது மாகாணத்திற்கான சட்டபூர்வமான அதிகாரங்கள் எதனையும் வழங்க மறுத்தது. அத்தோடு புலிகளுக்கு ஆயிரக்கணக்கில் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து பல நூறு கோடிக்கணக்கில் பணங்களையும் அள்ளிக்கொடுத்து மாகாண சபையையும் எமது கட்சித் தோழர்களையும் அழித்தொழிப்பதிலேயே முனைப்பாகச் செயற்பட்டது. இவ்வாறான ஓர் சூழ்நிலையிலேயே அன்றைய வடக்கு கிழக்கு மாகாண சபை மூலம் ஓர் பிரகடனத்தை செய்தது. அந்தப் பிரகடனத்தை ஈழப்பிரகடனம் என அரைகுறையாக்குவது சரியானது அல்ல. அந்தப் பிரகடனத்தில் இன்றைக்கும் தமிழர்களும் இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளவேண்டிய 19 அம்சங்கள் உள்ளன. அவையொரு நியாயமான அரசியல் கோரிக்கையின் தேவைகள் ஆகும். அந்த 19 கோரிக்கைகளையும் வலியுறுத்துவதற்காகவே நாம் முன்னர் கொண்டிருந்த தனி ஈழக் கோரிக்கைக்கு பின்நோக்கி செல்வதாக ஒரு பாவனையைக் காட்ட வேண்டியிருந்தது. எனவே நான் அன்று மாகாண சபையில் மேற்கொண்ட 19 அம்சங்களின் பிரகடனத்தில் பெரும்பாலானவை இன்றைக்கும் பிரதானமாக கவனத்தி;ல் கொள்ளப்பட வேண்டியவைகள் ஆகும்.

கேள்வி: மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முற்றான தீர்வா?

பதில் : மாகாணசபை முறைமை என்பது ஓர் அரசமைப்பின் வடிவமாகும். இங்கு பல மாகாணப் பிரிவுகளும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வோர் ஆட்சியமைப்பும் அவற்றை ஒருங்கிணைத்த மத்திய ஆட்சியமைப்பும் இந்த அமைப்பு முறையில் இருக்கும். நாட்டின் ஒரு பகுதி அரசியல் காரணங்களுக்காக தனியாக முற்றாகப் பிரிப்பது அல்லது விரிவது என்பது பிரிவினையாகும். அது இங்கு சாத்தியமும் அல்ல. சரியானதும் அல்ல என்பதே அனுபவம். சமஷ்டி அமைப்பு முறைää மாநில அரசு முறைää மாநில சுயாட்சி முறை எல்லாமே மாகாணசபை முறைமையின் வேறு பெயர்களே தவிர வேறு முறைமைகள் அல்ல. இது நாட்டுக்கு நாடு மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயங்களில் கூடுதலாகவோää குறைவாகவோ வேறுபட்டிருக்கலாம். எனவே பிரிவினை என்பதை கைவிட்டுப் பார்த்தோமானால் மாகாண ஆட்சியமைப்பு முறையே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வாகும்.

கேள்வி: வடக்குää கிழக்கு முன்னர் போல் இணைக்கப்பட வேண்டுமென தமிழர் தரப்பில் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : வடக்கு கிழக்கு மாகாணங்கள் முன்னர் போல் ஒருங்கிணைந்த ஒர் மாகாணமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அவ்வாறு இணைக்கப்பட்ட மாகாணத்தி;ல் இம்மாகாணத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்களின் பிரதானமான பிரதேசங்களுக்கும் சிங்களவர்களைப் பிரதானமாகக் கொண்ட பிரதேசங்களுக்கும் விஷேடமான உள்ளக அரசியல் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது வடக்கு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது இலங்கையின் எந்தவொரு மாகாணத்திலும் அவற்றின் எந்தவொரு பிரதேசத்திலும் அந்தந்த மாகாணத்தில் சிறுபான்மையாக வாழும் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு உள்ளக அரசியல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக மலையக மக்களுக்கும் வட மேல் மாகாணம்ää மற்றும் மேல் மாகாணத்த்pல் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழர்களுக்கும் இவ்வாறான உள்ளக கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணம் மீண்டும் இணையுமா அல்லது இணையாதா என்பதனை எனது விருப்பங்களைவிட எதிர்கால அரசியல் மாற்றங்களே தீர்மானிக்கும். கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாணத்தவர்கள் குரல் எழுப்புகின்ற அளவிற்கு வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலிருந்து வலுவான குரல் எதுவும் எழவில்லை என்பதுவும் உண்மையாகும்.

வடக்கு கிழக்கு மாகாணம் மீண்டும் இணைக்கப்பட வேண்டியது அவசியமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஓர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது இன்றைக்கும் 13வது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஒரு பாகமாக இன்றும் உள்ளது. இப்போது அந்த சர்வஜன வாக்கெடுப்பு நடக்குமோ அப்போது தான் இணைப்பு தொடர்பான விடயத்திற்கு முறையான விடை கிடைக்கும்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தம்முடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் : தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து தம்முடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஓர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் அது சரியானதோ நியாயமானதோ அல்ல என்றே நான் கருதுகிறேன். தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் சமூகத் தலைவர்கள் ஆகியோர் இணைந்த ஓர் கூட்டமைப்பு தமிழர்கள் மத்தியில் உருவாக வேண்டும். யார் யாரை விலக்கி விட்டு செயற்படலாம் என்ற நிலைப்பாட்டை விட்டு விட்டு யார் யாரையெல்லாம் ஒருங்கிணைத்து தமிழ் சழுதாயத்தின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம் ஆகும்.

கேள்வி: தற்போதைய கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் அமைச்சரவையும் தமது மாகாண அரசுக்கு அதிகாரங்கள் சரியாக வழங்கப்படவில்லையென்றும் அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளுநர் தலையீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் : மாகாண அரசிற்கான அதிகாரங்கள் என்ன அவற்றின் வகையறாக்கள் எந்தளவு. ஆளுநருக்கான அதிகார வரம்புகள் என்ன என்பது பற்றி 13வது திருத்தத்தின் மூலம் அரசியல் யாப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன. 13வது திருத்தம் திருப்திகரமானதோ இல்லையோ அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாக உள்ளது என்பது மட்டும் உண்மை. கிழக்கு மாகாண முதல் அமைச்சரும் அவரது அமைச்சர்களும் தமது மாகாண அரசிற்கு உரிய அதிகாரங்களை ஆளுனர் வழங்கவில்லை என்று கண்டால் அவை தொடர்பாக முதலமைச்சரும் அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் முறையீடு செய்து தீர்வு பெறவேண்டும். அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விடயங்களை வழக்காக எடுத்துச் சென்று தமக்கான தீர்வைப் பெற வேண்டும். அதை விடுத்து பத்திரிகை அறிக்கைகளாலோ விரக்தியான பேச்சுக்காளாலோ இந்தப் பிரச்சனைக்கு இப்போது தீர்வு காண முடியாது. அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் தொடர்பாக நிர்வாக ரீதியாக ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் கடமையும் அதிகாரமும் இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது என்று நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

கேள்வி: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் ஊடகவியலாளர் மகாநாடொன்றில் உங்கள் தொடர்பிலும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் உட்பட நீங்கள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோhர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இருக்கும்போது சென்னையில் உங்களைப் போன்றோரே வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில் : அமைச்சரின் அவ்வாறான கருத்துக்களுக்கு நான் பதில் கூறுவது சரியானதாக இருக்காது. ஊடகவியலாளர்கள் அiமைச்சரிடமே அவர் கூறும் கருத்துக்கள் தொடர்பாக எப்போது நடந்தது எங்கே நடந்தது என்று கேட்டு அந்த திகதிக்குரிய சென்னைப் பத்திரிகைகளைää ஊடகவியலாளர்களை நேரடியாகப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்லது இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் இந்தியாவினது தமது நட்பு ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு இந்திய காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினருடன் தொடர்புகொண்டு உண்மையான தகவல்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: கிழக்கு மாகாணசபை அதன் காலம் முடிவடைவதற்கு முன்னரே கலைக்கப்படலாமெனக் கூறப்படுகிறது. அவ்வாறு கலைக்கப்பட்டால் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் கட்சி ஊடாக அல்லது ஆளும்தரப்புடன் இணைந்து போட்டியிடுவீர்களா?

பதில் : நான் இலங்கையில் எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்காக இங்கு வரவில்லை. என்பதனை நான் உறுதியாக ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கையில் எந்தப் பதவிக்கான போட்டியிலும் எனது பெயரை இணைத்துப் பார்ப்பது உங்களுக்கு சுவாரசியமான செய்தியாக இருக்க மாட்டாது என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: அண்மைக் காலத்தில் இரு தடவைகள் இலங்கை வந்துவிட்டீர்கள். ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?

பதில் : நான் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் இங்கு வந்திருந்த ஒரு சில நாட்களும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் தலைவர்களும் மிகவும் கடுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நாட்களாகும். இந்த முறை நான் கொழும்பு வந்த அடுத்த நாளே யாழ்ப்பாணம் வந்து விட்டேன். தலைவர்களை சந்திப்பதற்கு முன்பு மக்களை ஊர் ஊராக சென்று சந்தித்து வருகிறேன். ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கு முயற்சிப்பேன். சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.

கேள்வி: இன்றைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காணுமென நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் : எதையும் நம்பிக்கையீனத்தோடு பார்க்காமல் நம்பிக்கைகளோடு முயற்சிப்போம் கடந்த காலங்களில் தீர்வுக்கான பல சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்து வந்தன. அந்த வேளைகளில் அதிகாரத்தில் இருந்த இலங்கை அரசாங்கங்கள்தான் அவற்றை நிராகரித்தன என்று கூற முடியாது. நல்ல சந்தர்ப்பங்கள் பல தமிழர்களுக்குக் கிடைத்தன: அவற்றையெல்லாம் தமிழர்கள் இழந்து போவதற்கு தமிழர்கள் மத்தியில் ஆயுதங்களை வைத்து ஆதிக்கம் வகித்த சக்திகளும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சமூக சக்திகளுமே காரணமாயிருந்தன. இனியாயினும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் வருகின்ற போது அந்த வாய்ப்புக்களை உரிய முறையில் தவறாது கைப்பற்றிக் கொள்வோம்.

நியாயமான அரசியற் தீர்வு ஒன்றை எதிர்பார்ப்போம்: வன்முறையற்ற அரசியல் முறைகளைக் கையாள்வோம்.: ஐக்கியப்பட்டு நின்று குரலெழுப்புவோம். அரசாங்கங்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியற் தலைவர்களும் மக்கள் சமூகத்தில் உள்ள பல்வேறுபட்ட தலைவர்களும். பிரதிநிதிகளும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தரமான அரசியற் தீர்வு ஒன்றைக் காணுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கேள்வி: வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நீங்கள் களத்தில் இறங்குவீர்களா?

பதில் : வட மாகாணசபைத் தேர்தல் வருமாயின் எனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் இறங்கக்கூடும். ஜனநாயகத்தை மீள நிலைநாட்டி உரிய நிலக்கு முன்னேற்றுவதில் தேர்தல்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. எத்தனையோ ஆபத்துக்கள் எததனையோ நெருக்கடிகள் இருந்த போதெல்லாம் எமது கட்சியினர் தேர்தல்களில் பங்குபற்றி வந்திருக்கின்றனர். ஜனநாயம் மேலும் முன்னேற்றகரமாக நிலைபெற இன்னும் பல தேர்தல்கள் இங்கு நடைபெற வேண்டியுள்ளன. என்ன வகையான தேர்தல்கள் வந்தாலும் நான் யாருக்கும் எதிராக ஒரு போட்டியாளனாக இறங்கும் எண்ணம் எனக்கு இல்லை எனக்கு இப்போது இருக்கும் பட்டப்பெயரே போதும்.

கேள்வி: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட சில குறிக்கோள்களை அடைவதை நோக்கி ஒரு கருத்தொற்றுமையை உருவாக்கி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். ஒவ்வொரு கட்சியும் தத்தமது அடையாளங்களோடும் அமைப்புகளோடும் தொடர்ந்து செயற்படட்டும். ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது குறிக்கோள்களுடன் கொண்டுவந்துள்ள தமது வேலை முறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கட்டும். ஒவ்வோரு குடிமகனும் எந்தவொரு கட்சியிலும் இணைந்து செயற்படுவதற்கு உரிமை உண்டு என்பதனை அங்கீகரிக்கட்டும். கருத்து வேறுபாடுகள் மத்தியில் இணக்கமான கருத்துக்களை அடையாளம் கண்டு அவற்றின் அடிப்படையில் ஐக்கியப்பட்டு செயல்பட வேண்டும். தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக்காக செயல்படுவதை விடுத்து இப்போது பிரதானமாகவுள்ள அகதிகளான எமது மக்களின் புனர்வாழ்வுää அழிந்து போன எமது தேசத்தின் புனர்நிர்மாணம்ää ஒரு நியாயமான அரசியல் தீர்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். கருத்தொற்றுமைக்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் அதன் மூலம் ஏற்படும் ஒற்றுமைப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஐக்கிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் : இலங்கை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்தியா தாராளமாகவும் உறுதியாகவும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

கேள்வி: தமிழ் மக்கள் இந்தியாவை சந்தேகத்துடனேயே அணுகுகின்றனர். இந்த விடயத்தில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுமா? அல்லது தமிழ் மக்கள் தமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டுமா?

பதில் : இந்தியாவை சந்தேகத்துடன் பார்க்கும் எமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியா பல்வேறு வல்லமைகளைக்கொண்ட ஒரு பெரிய நாடு. 11 ஆயிரம் லட்சம் மக்களைக் கொண்ட ஒரு கண்டம் இந்தியா தமிழ் மக்களைக் கண்டு சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மக்கள் இந்தியாவின் மீது சந்தேகம் கொள்வதனால் தமிழ் மக்களுக்கே அது நட்டமாகும். ஒரு நாட்டில் இருந்து உதவி பெற வேண்டுமாயின் அந்த நாட்டோடு தமது நட்பை சந்தேகத்திற்கிடமின்றி நெருக்கமாக்கிக் கொள்ளவேண்டும். இந்தியா மீது அவதூறுப் பிரச்சாரங்களைச் செய்துகொண்டு இந்தியாவை நம்பமுடியாது நம்பக்கூடாது என்று பிரச்சாரம் செய்துகொண்டு அதே கணத்தில் அதே வாயால் இந்தியா எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையான அணுகுமுறையாகும். நோய்வாய்ப்பட்டிருப்பது இந்தச் சமூகம். இந்தியா என்னும் வைத்தியனிடம் அந்த நோயைக் குணப்படுத்துவதற்கான வைத்திய உதவிகளையும் கேட்கும் முறையில் அணுக வேண்டும். இந்தியா எப்போதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது அனுதாபமும் ஆதரவும் கொண்ட நாடாகும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.


மனித உரிமைகள் இல்லத்தினரால் நடத்தப்பெற்ற இக்கருத்தரங்கில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவருமான தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது 40 வருட அரசியல் அனுபவங்களில் முக்கியமானவற்றையும் வடக்கு கிழக்கு மாகாணசபை அனுபவங்களையும் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதோடு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவற்றைப் பற்றி எல்லாம் யதார்த்தப10ர்வமாக எடுத்துரைத்தார் 13வது திருத்தச்சட்டம்ää சந்திரிகாவின் அரசியல் யாப்பு இவைபற்றிய குறிப்புரைகளை வழங்கியதோடு இவற்றை எம்மவர்கள் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் இல்லத்தில் தலைவர் செரின் சேவியர்ரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பங்குபற்றிய பலரும் ஆக்கப10ர்வமான கேள்விகளை எழுப்பியிருந்தனர். அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் மாற்றத்தை கொண்டுவரமுடியுமா? மலையக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் நிலைப்பாடு என்ன? பொருளாதார அவிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மாற்றத்தை கொண்டுவர முடியாதா? தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்கள அரசியல் தலைமை புரிந்து கொள்ளுமா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

கருத்தரங்கில் பங்குபற்றிய ஒருவர் எமது பிரதேசங்களில் குண்டு விழும் போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்வோம். எங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்ற ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் கலை இலக்கியவாதிகள் என 50க்கு மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தனர். சிந்தனை வட்டம் என்ன பெயரில் தொடர்ச்சியாக நிகழும் இக்கருத்தரங்கு மிகவும் ஆக்கப10ர்வமான முறையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive