Sunday, April 4, 2010

13-வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் - ஊடகவியலாளர் மாநாட்டில் வரதராஜப்பெருமாள் தெரிவிப்பு

SUNDAY APRIL 04, 2009
13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஆரம்பமாக வைத்து அதிகார பரவலாக்கல் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆட்சி யாளர்கள் வழங்கவேண்டும் என வடக்குக் கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்வியாளர்கள், வர்த்தகர்கள், பத்திரிகை யாளர்கள், அரச ஊழியர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.
யாரும் எதையும் சும்மா தரமாட்டார்கள். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தங்களு டைய நலன்களுக்கூடாகவே எமக்கு உதவு வார்கள். எமக்கு நன்மை செய்ய முன்வருபவர்களுடன் இணைந்து எமது சமுதாயத்தை முன்நோக்கி நகர்த்த வேண்டும். வன்முறைகளால் பலன் இல்லையயன கண்டு கொண்டோம்.
கடந்த காலங்களில் போரினால் எமது மக்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதுடன் 4 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இழப்பும் ஏற்பட்டது.இதனால் எமது சமூகம் ஒரு தலைமுறை பின்னோக்கித் தள்ளப்பட்டது. தென்னிலங் கையுடன் ஒப்பிட்டால் தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்ந்த ஏனையவற்றில் 60 ஆண்டுகள் பின்னோக்கியுள்ளோம். எனவே எல்லா தளங்களிலும் முன்னேற்றம் அடையவேண்டும்.
எமது மக்கள் மூளைப்பலசாலிகள். கடு மையான உழைப்பாளிகள். எனவே அறிவுப் பலமும், கடுமையான உழைப்பும் உள்ள சமூகம் பின்னேக்கியிருக்கக்கூடாது. எமது மக்களில் 8 இலட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் தரவி ருக்கும் உதவிகளைக் கொண்டு எங்கள் பிரதேசங்களை வளம் பெறச்செய்வோம். யாருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிலைநாட்டச் செய்வோம். சகல இன மக்களும் சமத்துவமாக வாழுவோம். யாரையும் பழிவாங்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் யாருக்கும் தலைகுனிய மாட்டோம்.
இன நெருக்கடிக்கு சிங்களவர் இடமளியார்கள்
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக நாடுகள் இலங்கையை கண்டு கொள்ள வில்லை. ஆனால் இப்போது இலங்கையின் ஒவ்வொரு அசைவையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கிறது. தமிழ்-சிங்கள இன நெருக்கடி மீண்டும் ஒரு முறை ஏற்பட சிங்கள மக்கள் இனி இட மளிக்கமாட்டார்கள்.
எனவே பிரிவினை வேண்டாம். சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவும் வேண் டாம் அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். எமது மக்களின் நியாயமான கோரிக்கை களை சிங்கள மக்களின் மனச்சாட்சியை தொடக்கூடிய வகையில் விடுக்கவேண்டும். எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் வேறெந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக் களுக்கும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் தவறு செய்து விட்டோம் இனியாவது தவறு செய் யாமல் இருப்போம்.
வடக்கு, கிழக்கை இணைப்பது தவறில்லை
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது இலங்கைக்கோ அல்லதுசர்வதேசத்திற்குகோ பாதகமான நடவடிக்கையல்ல. அதனை நாம் நம்பவைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச்சட்ட மூலம் ஒரு ஆரம்பப்படியாக இருக்கலாம். அதிலிருந்து அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டு அதில் ஒவ்வொரு சரத் திற்கும் விளக்கங்கள் கூறப்பட வேண்டும்.
இத்துடன் மத்திய அரசாங்கம் ஒரு சில அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஈ.பி.ஆர். எல்.எப். பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் சிறிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நவரட்ணராஜா, உறுப்பினர் கங்கா உட்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive