Monday, February 13, 2012511 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிரிகேடியர் கேர்ணல் எம்.டீ.யூ.வி. குணதிலக தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது.
அச்சுவேலி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இம்முகாமில் சுமார் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
இதன்போது, 400 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அத்துடன் சுமார் ஐம்பது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கான உணவும் வழங்கப்பட்டது.
