Sunday, June 5, 2011

புலிகளுக்கு எதிரான சட்டங்களை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்!

Sunday, June 5, 2011
புலிகளின் தீவிர போராளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிய முடிபை மறுபரிசீலனை செய்யுமாறு பயங்கரவாத நிபுணரும் பேராசிரியருமான றொகான் குணரட்ண கொழும்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புலிகளின் ஏனைய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி அவர்களை விடுவித்து வருவது போன்று இப்போராளிகளையும் விடுவிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு அவர் கூறியுள்ளார். படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் நடைபெற்ற மூன்று நாள் போர் அனுபவ கருத்தரங்கில் கடைசிநாளான நேற்று முன்தினம் நிறைவுரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஓர் அரசாங்கம் நுண்ணிய திட்டமிடலுடன் கவனமாகச் செயற்பட்டால் தீவிரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்பது இலங்கையின் அனுபவத்தில் இருந்து தெளிவாகியுள்ளது. அரசாங்கம் போரில் வெற்றி பெற்றதற்கு இந்திய அரசாங்கத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவும் மிக முக்கியமானது. வன்னியில் இடம்பெற்ற போரின்போது இவ்விரு நாடுகளின் தரப்பிலும் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, போர் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டமை இப்போரின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்துள்ளது.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு உலகத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான ஒரு தகவல் பரிமாற்ற நிலையத்தை படைத்தரப்பு உருவாக்க வேண்டும். இதன் ஊடாக இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் தனது உரையில் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive