Sunday, March 6, 2011

TNAயில் நான் இருந்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் -புலிகளின் எடுபிடி- ஆனந்தசங்கரி..

Sunday, March 6, 2011
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்திருந்தால் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக்கூட்டனியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை(05-03-11)அரிப்பு பொது மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நான் என்றும் புலிகளுக்கு எதிரானவன் இல்லை. அதில் இணைந்திருந்தவர்கள் எமது பிள்ளைகள்.எமது பிள்ளைகளை அழிக்க வேண்டாம் என்று மட்டும் தான் கூறிவருகின்றேன்.தற்போது கே.பி என்பவர் அரசாங்கத்திற்கு எடுபிடியாகவுள்ளார்.

மக்களுக்கு தொண்டு செய்து வந்த பல தொண்டு அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் கே.பி தொண்டு நிறுவனமொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு எடுபிடியாக செயற்பட்டு வருகின்றார். இது எந்த வகையில் ஞாயம் என கேட்டார்.

ஆகவே முசலி வாழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தினாலும் அமைச்சர்களினாலும் கொடுக்கும் பிச்சை பொருட்களை வேண்ட வேண்டாம் என்றும் அதனை தூக்கி எறிந்து விடுங்கள் என தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரனித்தலைவர் சிவகரன்,சட்டத்தரணி சிறாயிவா ஆகியோரும் முசலி பிரதேச சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ச்சியாக இருந்திருந்தால் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் - ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் தாம் தொடர்ச்சியாக அங்கம் வகித்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேலுப்பிள்ளைப் பிரகாரனை தாம் விரோதியாக பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தவறான வழியில் சென்ற பிரபாகரனை சரியான பாதைக்கு திசை திருப்பும் முயற்சியில் தாம் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என தாம் பிரபாகரனுக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்ததாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழீழக் கனவினால் இளம் உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக தாம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive