Wednesday, March 31, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 – தோழர் மோகன்

தோழர் மோகன் -கந்தையா சிவராசா இல-2

1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர்
ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம் - இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் - ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் – எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர். ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.குறிப்பாக தென் மராட்சிப் பகுதியி;லும் பொதுவாக யாழப்;பாணத்திலும் விழிம்பு நிலை மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை அணிதிரட்டவதிலும் பணியாற்றியவர்.யாழ் குடாநாட்டில் மாத்திரமல்ல 1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் பல்வேறு வெகுஜன கிளர்ச்சி அமைப்புக்களில் பணியாற்றியவர்.தமிழ் மக்கள் மத்தியில் சகோதரப் படுகொலைகளின் காரணமாக ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கபட்டதன் பின்னர் கடந்த 20 வருடங்களுக’கு மேலாக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கு போராடி வந்தவர்.துமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம், அதனைத் தொடர்ந்து இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.தற்போது சுயநிர்ணய உரிமையின் அடிபடையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது செய்றபாடுகளில் அவர் பங்களித்து வருகிறார்.கடந்த கால்நூற்றாண்டுகளில் இனப்பிலச்சனைக்கு தீர்வுகாண வாராது வந்துற்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் இழக்கப்பட்டன.இப்போது உயிர் உடைமை இழப்புக்களைச் சந்தித்து அகதிகளாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் தமிழ் மக்களில் பெருவாரியானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்வில் வெளிச்சம் வரவேண்டும்.என்னதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்ட விடப்போவதில்லை.எனவே இலங்கையின் அரசியல் முறைமையில் நாம் பங்கு தாரர்கள்.நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று கருதும் அளவிற்கு சமத்துவமான வாழ்க்கை வேண்டும்.இவற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு எமது அண்டை நாடு நட்பு நாட இந்தியாவின் அனுசரணை வேண்டும்.இந்த அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் திறனும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இற்கு இருக்கிறது.கூட்டதில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிப்பது வீண் விரயம்.நாம் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. செயலாற்றல் உள்ளவர்கள்.எமது சின்னம் மெழுகுவர்த்திஇல-2 பத்மநாபா ஈபிஆர்எல்எப்

No comments:

Post a Comment

Followers

Blog Archive