Sunday, April 4, 2010

13-வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் - ஊடகவியலாளர் மாநாட்டில் வரதராஜப்பெருமாள் தெரிவிப்பு

SUNDAY APRIL 04, 2009
13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஆரம்பமாக வைத்து அதிகார பரவலாக்கல் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆட்சி யாளர்கள் வழங்கவேண்டும் என வடக்குக் கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்வியாளர்கள், வர்த்தகர்கள், பத்திரிகை யாளர்கள், அரச ஊழியர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.
யாரும் எதையும் சும்மா தரமாட்டார்கள். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தங்களு டைய நலன்களுக்கூடாகவே எமக்கு உதவு வார்கள். எமக்கு நன்மை செய்ய முன்வருபவர்களுடன் இணைந்து எமது சமுதாயத்தை முன்நோக்கி நகர்த்த வேண்டும். வன்முறைகளால் பலன் இல்லையயன கண்டு கொண்டோம்.
கடந்த காலங்களில் போரினால் எமது மக்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதுடன் 4 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இழப்பும் ஏற்பட்டது.இதனால் எமது சமூகம் ஒரு தலைமுறை பின்னோக்கித் தள்ளப்பட்டது. தென்னிலங் கையுடன் ஒப்பிட்டால் தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்ந்த ஏனையவற்றில் 60 ஆண்டுகள் பின்னோக்கியுள்ளோம். எனவே எல்லா தளங்களிலும் முன்னேற்றம் அடையவேண்டும்.
எமது மக்கள் மூளைப்பலசாலிகள். கடு மையான உழைப்பாளிகள். எனவே அறிவுப் பலமும், கடுமையான உழைப்பும் உள்ள சமூகம் பின்னேக்கியிருக்கக்கூடாது. எமது மக்களில் 8 இலட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் தரவி ருக்கும் உதவிகளைக் கொண்டு எங்கள் பிரதேசங்களை வளம் பெறச்செய்வோம். யாருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிலைநாட்டச் செய்வோம். சகல இன மக்களும் சமத்துவமாக வாழுவோம். யாரையும் பழிவாங்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் யாருக்கும் தலைகுனிய மாட்டோம்.
இன நெருக்கடிக்கு சிங்களவர் இடமளியார்கள்
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக நாடுகள் இலங்கையை கண்டு கொள்ள வில்லை. ஆனால் இப்போது இலங்கையின் ஒவ்வொரு அசைவையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கிறது. தமிழ்-சிங்கள இன நெருக்கடி மீண்டும் ஒரு முறை ஏற்பட சிங்கள மக்கள் இனி இட மளிக்கமாட்டார்கள்.
எனவே பிரிவினை வேண்டாம். சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவும் வேண் டாம் அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். எமது மக்களின் நியாயமான கோரிக்கை களை சிங்கள மக்களின் மனச்சாட்சியை தொடக்கூடிய வகையில் விடுக்கவேண்டும். எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் வேறெந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக் களுக்கும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் தவறு செய்து விட்டோம் இனியாவது தவறு செய் யாமல் இருப்போம்.
வடக்கு, கிழக்கை இணைப்பது தவறில்லை
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது இலங்கைக்கோ அல்லதுசர்வதேசத்திற்குகோ பாதகமான நடவடிக்கையல்ல. அதனை நாம் நம்பவைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச்சட்ட மூலம் ஒரு ஆரம்பப்படியாக இருக்கலாம். அதிலிருந்து அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டு அதில் ஒவ்வொரு சரத் திற்கும் விளக்கங்கள் கூறப்பட வேண்டும்.
இத்துடன் மத்திய அரசாங்கம் ஒரு சில அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஈ.பி.ஆர். எல்.எப். பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் சிறிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நவரட்ணராஜா, உறுப்பினர் கங்கா உட்பட்டோர் கலந்து கொண்டனர்

Saturday, April 3, 2010

SATURDAY, APRIL 03, 2010

அரசியல் களம் நிகழ்ச்சியில் தோழர் வரதராஜப்பெருமாள்
சனிக்கிழமை 03.04.2010 இலங்கை நேரம் இரவு 10.00 – 12.00 வரை டான் தமிழ் ஒளி நடாத்தும் அரசியல் களம் நிகழ்ச்சியில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரும்ää முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார்.




ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரச்சாரக்கூட்டங்கள் -படங்கள்

SATURDAY, APRIL 03, 2010
யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் கூட்டம் இன்று (01) யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அல்பிரெட் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

பெருமளவு அங்கத்தவர்களை கொண்ட இது போன்ற சங்கங்கள் தொடர்ந்து செயற்படுவது சாதனையாகும். நான் அரசியல் கட்சி ஒன்றை சார்ந்தவனாக இருந்த போதும் இந்த சங்கத்திற்குள் எமது அரசியல் கருத்துக்களை திணிப்பது எங்கள் நோக்கமில்லை. இந்த சங்கத்தின் உறுப்பினர்களான தொழிலாளர்கள், அது சார்ந்த சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் நாமும் பங்களிக்க வேண்டும் என்ற எமது கட்சியின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த சங்க கூட்டத்தில் கலந்துகொண் டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பொது அமைப்புக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானது. ஆனால், சங்கத்தின் நலன் கருதியும், சங்கம் சார்ந்த சமூகத்தின் நலன் கருதியும் அவற்றை சுமுகமான முறையில் தீர்த்து கூட்டாக செயற்படுவது சங்கத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.

சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் 200; க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் மேற்படி மண்டபத்தில் சந்தித்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த தலைவருமான தோழர் அ. வரதராஜப்பெருமாள் அவர்கள் அங்கு உரையாற்றும் போது
நீங்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானபோது நான் உங்கள் மத்தியில் இருக்கவில்லை ஆயினும் இந்த மண்ணினதும், மக்களினதும் நினைவுகளோடு வாழ்ந்திருந்தேன் நான் பிறந்து, வளர்ந்த சொந்த நிலத்திற்கு வருவதற்கான காலம் வராதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தேன் அந்த சந்தர்ப்பம் வாய்த்திருப்பதுடன் இன்று உங்களோடு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என கண்களில் நீர்பனிக்க தெரிவித்தார்.

இந்தியா தனிநாட்டை எடுத்துத் தராது ஆனால், இந்தியா தமிழ் மக்கள் மீது இன்னமும் அனுதாபம் கொண்டிருக்கின்றது. இந்தியாவுடன் எனக்குள்ள உறவை பயன்படுத்தி உங்களுடைய அபிப்பிராயங்களை நான் எடுத்துச் சொல்வேன். வேறெந்த தமிழ் தலைவர்களை விடவும் என்னால் இவ்விடயத்தில் காத்திரமாகச் செயற்பட முடியும் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

Friday, April 2, 2010

FRIDAY, APRIL 02, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.
FRIDAY, APRIL 02, 2010

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் தொடர்பில் சரியான வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனக் கோரி கரு ஜயசூரிய இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் நேரத்திற்கு நேரம் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நகைப்புக்கு உரியதாக மாறியுள்ளதென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சகல மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நியாயமானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
FRIDAY, APRIL 02, 2010

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் கைது

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சிசில் கின்டல்பிட்டிய இன்று காலை வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ள முயற்சித்ததாக பெண்மணி ஒருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்

Thursday, April 1, 2010

தோழர் வரதராஜப்பெருமாள் யாழ் பிராந்திய அலுவலகத்தில் சந்திப்பு


THURSDAY, APRIL 01, 2010
யாழ்ப்பாணம் வந்துள்ள வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் இன்று பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் தோழர்களையும், ஆதரவாளர்களையும், கட்சியின் நலன் விரும்பிகளையும் சந்தித்தார்.


அவர்கள் மத்தியில் உரையாற்றிய தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சி கடந்தகாலத்தி;ல் சாதித்தவை குறித்தும் இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் எம்மால் சாதிக்க முடியும் எனவும் அதற்கு பக்கபலமாக உங்கள் ஒத்துழைப்பும் மக்கள் ஆதரவும் வேண்டும் எனவும் தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தோழர் துரைரட்ணம், கட்சியின் யாழ் பிராந்திய செயலாளரும், வேட்பாளருமான தோழர் மோகன், மற்றும் வேட்பாளர்களான அரியரட்ணம், மகாலிங்கம்

இறுதியில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தோழர்களும், ஆதரவாளர்களும் கட்சியை பலப்படுத்துவதறகு கட்சியின் கடந்த காலவரலாறு இளந்தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு எடுத்துக் கூறி விளங்கவைக்க வேண்டியது அவசியம் என கருத்துத் தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------------------------------------

பாராளுமன்றத் தேர்தல் 2010 – தோழர் மோகன்

தோழர் மோகன் -கந்தையா சிவராசா இல-2


•1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர்
•ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
•1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
•தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
•ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
•ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம் - இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் - ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் – எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர். ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
குறிப்பாக தென் மராட்சிப் பகுதியி;லும் பொதுவாக யாழப்;பாணத்திலும் விழிம்பு நிலை மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை அணிதிரட்டவதிலும் பணியாற்றியவர்.
யாழ் குடாநாட்டில் மாத்திரமல்ல 1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் பல்வேறு வெகுஜன கிளர்ச்சி அமைப்புக்களில் பணியாற்றியவர்.
தமிழ் மக்கள் மத்தியில் சகோதரப் படுகொலைகளின் காரணமாக ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கபட்டதன் பின்னர் கடந்த 20 வருடங்களுக’கு மேலாக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கு போராடி வந்தவர்.
துமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம், அதனைத் தொடர்ந்து இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
தற்போது சுயநிர்ணய உரிமையின் அடிபடையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது செய்றபாடுகளில் அவர் பங்களித்து வருகிறார்.
கடந்த கால்நூற்றாண்டுகளில் இனப்பிலச்சனைக்கு தீர்வுகாண வாராது வந்துற்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் இழக்கப்பட்டன.
இப்போது உயிர் உடைமை இழப்புக்களைச் சந்தித்து அகதிகளாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் தமிழ் மக்களில் பெருவாரியானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் வாழ்வில் வெளிச்சம் வரவேண்டும்.
என்னதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்ட விடப்போவதில்லை.
எனவே இலங்கையின் அரசியல் முறைமையில் நாம் பங்கு தாரர்கள்.நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று கருதும் அளவிற்கு சமத்துவமான வாழ்க்கை வேண்டும்.
இவற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு எமது அண்டை நாடு நட்பு நாட இந்தியாவின் அனுசரணை வேண்டும்.
இந்த அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் திறனும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இற்கு இருக்கிறது.
கூட்டதில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிப்பது வீண் விரயம்.
நாம் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. செயலாற்றல் உள்ளவர்கள்.
எமது சின்னம் மெழுகுவர்த்தி
இல-2 பத்மநாபா ஈபிஆர்எல்எப்

-------------------------------------------------------------------------------------

யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!
உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!


எமது அன்பின் தோழரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான தோழர் சிறீதரன் அவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரிய வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மெழுகுதிரி சின்னத்துக்கு நேரே உங்கள் புள்ளடிகளை இடுவதோடு தோழர் சிறிதரன் அவர்களின் இலக்கமான 6 க்கு மேலேயும் உங்கள் புள்ளடிகளை இடுங்கள் என வேண்டிக் கொள்கிறோம்.

தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார்.

தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.

1970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள் “ஈழ மாணவர் குரல்” என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார்.

ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர்.

அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் “தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.

தமிழர்கள் மத்தியில் சாதிகளின் பேரிலுள்ள கொடூரங்களை ஒழிப்பதற்கு சிறுப்பிட்டி மத்தாள் ஓடை போன்ற இடங்களில் மக்கள் முன்னணிகளை அமைத்து நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் கூலிப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அதற்காக கிராமங்கள் தோறும் ஓய்வு உழைச்சலின்றி உழைத்தவர், அவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த கிராமிய முன்னணிகளோடு சேர்ந்து நின்றும் செயற்பட்டவர்.

இப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கூலிவிவசாயிகளும் மாணவர்களும் இணைந்து ‘ஜனசக்தி’ எனப் பெயரிடப்பட்ட சவர்க்காரங்களைத் தயாரித்து விற்பனை செய்து கூலிவிவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.

தோழர் சிறிதரன் அவர்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள சக்திகள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இந்தியத் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் முன்னேற்றங்களுக்கும் தோழர் சிறிதரன் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பான தலைவனாகவும் சந்தர்ப்பவாதங்களுக்கு இடமளிக்காது தொடர்ந்து போராடும் சிறந்த போராளியாகவும், காலம் சூழல் அறிந்து அதற்குத் தக்கபடி மக்களின் நலன்கனை முன்னிறுத்தி உரியமுறைகளிற் செயற்படும் செயல்வீரனாகவும் இருப்பார் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

யாழ்ப்பாண வாக்காளப் பெருமக்களாகிய நீங்களும் இந்த நம்பிக்கைகளோடு நல்ல தலைவனான, சிறந்த தோழனான, அறிவார்ந்த சிந்தனையாளனான, உறுதியான போராளியான தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆக்குமாறு உங்களை நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

முதலில் மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடி
அதே வாக்குச் சீட்டில் கீழேயுள்ள
தோழர் சிறிதரனின் இலக்கம் 6 க்கும் உங்கள் புள்ளடி

வேண்டுவோர்:
ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்,
ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்,
அத்துடன் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் அன்புத் தோழர்கள் நண்பர்கள்


















Wednesday, March 31, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 – தோழர் மோகன்

தோழர் மோகன் -கந்தையா சிவராசா இல-2

1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர்
ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம் - இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் - ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் – எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர். ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.குறிப்பாக தென் மராட்சிப் பகுதியி;லும் பொதுவாக யாழப்;பாணத்திலும் விழிம்பு நிலை மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை அணிதிரட்டவதிலும் பணியாற்றியவர்.யாழ் குடாநாட்டில் மாத்திரமல்ல 1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் பல்வேறு வெகுஜன கிளர்ச்சி அமைப்புக்களில் பணியாற்றியவர்.தமிழ் மக்கள் மத்தியில் சகோதரப் படுகொலைகளின் காரணமாக ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கபட்டதன் பின்னர் கடந்த 20 வருடங்களுக’கு மேலாக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கு போராடி வந்தவர்.துமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம், அதனைத் தொடர்ந்து இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.தற்போது சுயநிர்ணய உரிமையின் அடிபடையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது செய்றபாடுகளில் அவர் பங்களித்து வருகிறார்.கடந்த கால்நூற்றாண்டுகளில் இனப்பிலச்சனைக்கு தீர்வுகாண வாராது வந்துற்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் இழக்கப்பட்டன.இப்போது உயிர் உடைமை இழப்புக்களைச் சந்தித்து அகதிகளாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் தமிழ் மக்களில் பெருவாரியானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்வில் வெளிச்சம் வரவேண்டும்.என்னதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்ட விடப்போவதில்லை.எனவே இலங்கையின் அரசியல் முறைமையில் நாம் பங்கு தாரர்கள்.நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று கருதும் அளவிற்கு சமத்துவமான வாழ்க்கை வேண்டும்.இவற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு எமது அண்டை நாடு நட்பு நாட இந்தியாவின் அனுசரணை வேண்டும்.இந்த அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் திறனும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இற்கு இருக்கிறது.கூட்டதில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிப்பது வீண் விரயம்.நாம் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. செயலாற்றல் உள்ளவர்கள்.எமது சின்னம் மெழுகுவர்த்திஇல-2 பத்மநாபா ஈபிஆர்எல்எப்

WEDNESDAY, MARCH 31, 2010

















ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

WEDNESDAY, MARCH 31, 2010
களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.
நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.
இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.
ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

WEDNESDAY, MARCH 31, 2010

* 58,700 பொலிஸ்
*19,500 முப்படைகள் + அதிரடிப்படை
* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு
* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு

போதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.
வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.
நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

Tuesday, March 30, 2010

TUESDAY, MARCH 30, 2010



வெலிகடைப் படுகொலை ஐதே கட்சி தலைவன் ஜேஆர் இனால்!

கந்தன் கருணைப் படுகொலை புலித் தலைவன் பிரபாகரனால்!!

இரண்டிலும் கொல்லப்படவர்கள் தமிழ்ச் சிறைக் கைதிகளே!!!

தமிழர் உரிமைக்காக போராடப் புறப்பட்டதே இவர்கள் செய்த குற்றம்!!!!

இரண்டிற்கும் தூபம் போட்டவர்கள்ää தமிழ் தேசியப் கூட்டமைப்பின் எஜமானர்கள் புலிகளே!
இவ்விரு சிறைப் படுகொலையிலும் மாண்டவர்கள் போகää மீண்டவர்கள் இன்று உங்கள் முன்னிலையில். நெருப்பாய் உருகி ஒளியேற்றிட மெழுகு திரியாய் நிற்கின்றனர். அவர்கள் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்ää புளொட் இணைந்த கூட்டு முன்னணியினர். அலைகடலிலும் தம்மை இழந்து காப்பாற்ற நங்கூரமிட்டு நிற்கின்றனர்.
உங்கள் சின்னம் மெழுகுதிரி

Monday, March 29, 2010

யாழ் மாவட்ட பெருமக்களே! உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!--MONDAY, MARCH 29, 2010

எமதினிய பாசமிகு யாழ் மாவட்ட பெருமக்களே!உங்களிடம் எமது அன்பான வேண்டுகோள்!
எமது அன்பின் தோழரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான தோழர் சிறீதரன் அவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் அரிய வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மெழுகுதிரி சின்னத்துக்கு நேரே உங்கள் புள்ளடிகளை இடுவதோடு தோழர் சிறிதரன் அவர்களின் இலக்கமான 6 க்கு மேலேயும் உங்கள் புள்ளடிகளை இடுங்கள் என வேண்டிக் கொள்கிறோம்.
தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் தமது மாணவபிராயத்திலிருந்தே தமிழர்களின் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் உழைத்து வருபவர். இதனால் அவரது உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்ததுடன், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு ஆண்டுகாலமாக இராணுவக் கொத்தளங்களிலும் வெலிக்கடையிலும் சிறைவாசம் அனுபவித்தார். இராணுவத்தின் சித்திரவதைகளுக்கும் சிறைவாசக் கொடூரங்களுக்கும் உள்ளானார்.
தாம் கொண்ட கொள்கையில் உறுதியான தோழர் சிறிதரன் அவர்கள் மரணத்தின் வாயில்களைக் கண்டபோதிலும் தாம் தொடங்கிய இலட்சியப்பாதையில் பேராபத்துக்களின் மத்தியிலும் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கட்சித் தோழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய அணிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் எப்போதும் கண்ணியமாகவும் கனவானாகவும் நடந்து வந்துள்ள பண்பாளர். பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகாத உறுதியான நெஞ்சமும் நேர்மையான நடத்தையும் கொண்ட போராளி அவர்.
1970களின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கிய சிறிதரன் அவர்கள் “ஈழ மாணவர் குரல்” என்னும் எழுச்சிப் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். மேலும் ஈழமுழக்கம், செந்தளம் மற்றும் செந்தணல் ஆகிய வெளியீடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கண்ணோட்டம் பத்திகையின் ஆசிரியராகவும் அரசியல் எழுத்துப் பணியாற்றி வருகிறார். அவர் அயராத அபாரமான எழுத்தாளர். கட்சித் தோழர்கள் மத்தியில் உதாரண புருஷனாகவும் ஆற்றல் மிக்க ஆசானாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை வழி நடத்தும் ஒரு புரட்சிகரத் தலைவனாக அவர் செயற்பட்டு வருகிறார்.
ஈழத் தமிழர்கள் சுயாட்சி கொண்ட அதிகாரப் பகிர்வைப் பெறவும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும், தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஜனநாயக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவும் அனைத்து தளங்களிலும் அயராது அஞ்சாது உழைத்து வருபவர்.
அரசியல் உரிமைக்கான போராட்டமும் சமூகத்தில் நிலவும் சாதிகள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான போராட்டமும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டமும் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீர்க்கமான பற்றுறிதி கொண்டு செயற்பட்டு வருபவர். 1980களில் “தட்டுகளில் உணவும் சிரட்டைகளில் தேனீரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கியவர்.
தமிழர்கள் மத்தியில் சாதிகளின் பேரிலுள்ள கொடூரங்களை ஒழிப்பதற்கு சிறுப்பிட்டி மத்தாள் ஓடை போன்ற இடங்களில் மக்கள் முன்னணிகளை அமைத்து நில உரிமைப் போராட்டங்கள் மற்றும் கூலிப்போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அதற்காக கிராமங்கள் தோறும் ஓய்வு உழைச்சலின்றி உழைத்தவர், அவ்வாறு உழைத்துக் கொண்டிருந்த கிராமிய முன்னணிகளோடு சேர்ந்து நின்றும் செயற்பட்டவர்.
இப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கூலிவிவசாயிகளும் மாணவர்களும் இணைந்து ‘ஜனசக்தி’ எனப் பெயரிடப்பட்ட சவர்க்காரங்களைத் தயாரித்து விற்பனை செய்து கூலிவிவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.
தோழர் சிறிதரன் அவர்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள சக்திகள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியிலும் இந்தியத் தலைவர்கள் மத்தியிலும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் முன்னேற்றங்களுக்கும் தோழர் சிறிதரன் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாகவும் பொறுப்பான தலைவனாகவும் சந்தர்ப்பவாதங்களுக்கு இடமளிக்காது தொடர்ந்து போராடும் சிறந்த போராளியாகவும், காலம் சூழல் அறிந்து அதற்குத் தக்கபடி மக்களின் நலன்கனை முன்னிறுத்தி உரியமுறைகளிற் செயற்படும் செயல்வீரனாகவும் இருப்பார் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
யாழ்ப்பாண வாக்காளப் பெருமக்களாகிய நீங்களும் இந்த நம்பிக்கைகளோடு நல்ல தலைவனான, சிறந்த தோழனான, அறிவார்ந்த சிந்தனையாளனான, உறுதியான போராளியான தோழர் சிறிதரன் (சுகு) அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரை உங்களின் பாராளுமன்றப் பிரதிநிதி ஆக்குமாறு உங்களை நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
முதலில் மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிஅதே வாக்குச் சீட்டில் கீழேயுள்ளதோழர் சிறிதரனின் இலக்கம் 6 க்கும் உங்கள் புள்ளடி
வேண்டுவோர்:ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள்,அத்துடன் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் அன்புத் தோழர்கள் நண்பர்கள்.

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார்-MONDAY, MARCH 29, 2010

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.
நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.
2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.
அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.
மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.
அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம். இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

MONDAY, MARCH 29, 2010 சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 28, 2010

Sunday, March 28, 2010

மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே -ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன்

வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்















வெளிச்சம்’ மாத வெளியீடு இலண்டன் EPIC நிலையத்தினரால் வெளியிடப்பட்டது

Sunday, March 28, 2010
கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகள, சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் மாத வெளியீடு இலண்டன் EPIC (ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம்) நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.
ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம் இலண்டனிலிருந்து வெளிச்சம் என்ற பெயரில் 4 பக்கங்களை கொண்ட மாத செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றய அரசியல் நிலவரங்களை குறித்த கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக மாசி மாதத்திற்கான முதல் வெளியீடு வெளிவந்துள்ளது.
இடதுசாரிகளின் ஒற்றுமை இன்றய அவசியம் என்ற தலைப்பில் திரு லோகநாதன் அவர்களுடைய கட்டுரை தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையுடையவர்களும் இடதுசாரிகளும் இன்றய நிலையில் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் கருதி நேரம் கடத்தாமல் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருப்பது தேவையான ஒன்றாக உள்ளது. புதுமாத்தளனில் தொலைத்ததை ஐரோப்பாவில் தோண்டுவதா? என்ற ஆதவனின் கட்டுரை, ஐரோப்பாவிலும் கனடாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற என்ற பாதாகையை சுமந்து மக்களை ஏமாற்றும் பொழுது பொக்குக்காரர்களின் நாடியை பிடித்து கோடிட்டுக்காட்டியுள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் என்ற தலைப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு, மற்றும் புலிப்பிரமுகர்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம செய்தார்கள் என்பதையும் இப்பிரச்சாரங்களின் உள்நோக்கம் வெறுமனே சுயநலமான வெறும் எதிர்ப்புவாத போக்கேயொளிய தமிழ் மக்களின் நலன்களிலிருந்து சிந்திப்பதாக இல்லாததை வெளிப்படுத்தியுள்ள கட்டுரையாக பல விபரண கருத்தாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும் கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகளும் சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் போன்ற ஆக்கங்கள் மென்மேலும் பல நல்ல விடயங்களை சுமந்துவரவேண்டும். வாழ்த்துக்கள்
.

Followers

Blog Archive