Thursday, May 19, 2011

புத்த கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்!

Thursday, May 19, 2011
2 ஆயிரத்து 600வது ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்திக்கு ஒத்ததாக “பிங்பர லங்கா” என்ற பெயரில் தேசிய மரபுரிமை புத்த கண்காட்சி தேசிய நூதனசாலை வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில், துட்ட கைமுனு அரசனின் அஸ்தி உட்பட பல புராதன பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச தேசிய நூதனசாலையின் புராதன சொத்துக்களையும் பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய கூட்டிணைவு நாடுகளின் கல்மக்கியா இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் உலக செக் சங்கத்தின் தலைவர் கிருஷான் இலும்பினோவ் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

எஞ்சியவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் - இந்தியா!

Thursday, May 19, 2011
இடம் பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாமல் உள்ள மக்களை துரித கதியில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரிஸ் ஆகியோருக்கிடையே இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அதிகார பரவலாக்கம் குறித்து தமது அரசாங்கம் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் 6 சுற்று பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளன.

பேச்சுவார்தைகளில் கலந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகளும் சில பிரேரணைகளை முன்வைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளதார, இரு நாட்டு சகோதரத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் புதிய விமானம் கொள்முதல் ஏ-320: பிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க வருகை!

Thursday, May 19, 2011
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்குப் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏ-320 ரக பயணிகள் விமானம் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறது.

பிரான்ஸின், டுலஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும் இப்புதிய பயணிகள் விமானம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான தளத்தில் தரையிறங்குகிறது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இவ்விமானத்தில் இலங்கை வருகிறார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் 18 வது விமானமாக இணைத்துக் கொள்ளப்பட வுள்ள இப்புதிய ஏ- 320 ரக விமான த்தில் 20 “பிஸ்னஸ் கிளாஸ்” இருக்கைகளும் 120 சாதாரண இருக்கைகளும் கொண்ட தாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் 52 ஆவது சேவையாக ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையையும் ஆரம்பிக்கிறது என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண கூறினார்

Followers

Blog Archive