
லிபியாவில் சிக்கியுள்ள இலங்கையர் களுள் 400 பேர் நாளை வெள்ளிக் கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இரண்டு விசேட விமானங்கள் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ஜோர்டானுக்கு சொந்தமான ரோயல் ஜோர்தானியன் எயார் வேஸ¤க்கு சொந்தமான இரண்டு விமானங்கள் திரிபோலி விமான நிலையத்திலிருந்து ஜோர்டான் - டுபாய் ஊடாக இவ் இலங்கையர்களை அழைத்து வரவுள்ளதாக திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகம ஆராச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய காலி மாவட்ட எம்.பி. சச்சின்வாஸ் குணவர்தன விசேட விமானங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சி தெரிவித்தார்.
ஜோர்தானியன் எயார்வேஸ¤க்கு சொந்தமான ஒரு விமானம் வெள்ளிக் கிழமை திரிபோலியிலிருந்து புறப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமையும் மற்றொரு ஜோர்தானியன் விமானம் திரிபோலியிலிருந்து புறப்படுகிறது.
எனினும் இவ் விமானங்கள் திரிபோலி யிலிருந்து புறப்படும் நேரங்களை தற்போது கணிப்பிட முடியாதுள்ளது என தெரிவித்த இலங்கைத் தூதர், திரிபோலி விமான நிலையம் பரபரப்பாக இருப்பதால் முன்கூட்டியே நேரத்தை கூற முடியாதுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, திரிபோலி உட்பட லிபியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பவிரும்பாத னால். உடனடியாக தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச் சீட்டு இலக்கம் பெயர் என்பவற்றை பதிவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.
சில இலங்கையர் நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறிய சுதந்த கனேகல ஆராச்சி, லிபியாவின் தற்போதைய நிலை, அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எமது மக்களுக்கும் விளக்கமாக கூறியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
லிபியாவின் பேர்த் நகரிலிருந்து சைப்பிரஸின் நார்மாத்தா நகருக்குக் கொண்டு சென்ற 29 இலங்கையரின் நிலை தொடர்பாக இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சியிடம் தினகரன் கேட்ட போது,
நார் மாத்தா நகரிலுள்ள கொன் சியூலர் 29 பேரையும் பொறுப்பேற் றுக் கொண்டதாக சைப்பிரஸிலிரு ந்து தொலைபேசி மூலம் தெரிவித் ததாகவும் விரைவில் 29 பேரும் இலங்கை வந்து சேருவார்கள் என் றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, லிபியாவில் சிக்கியிருந்த மேலும் 22 பேர், அவர்கள் தொழில்புரிந்த நிறுவனத்தினூடாக கப்பல் மூலம் மோல்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மோல்டாவிலுள்ள 22 பேரும் நேற்று மாலை இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சைப்பிரஸிலுள்ள நார்மாட்டா நகரிலுள்ள 29 இலங்கையர்களும் இன்று 3 ஆம் திகதி அதிகாலை இலங்கை வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.
மேலும், 54 பேர் கப்பல் மூலம் கடந்த முதலாம் திகதி மோல்டாவை வந்தடைந்துள்ளனர். இவர்களும் இன்று இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.