Sunday, November 6, 2011 நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாது பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப் பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
நவீனத்துவம் என்பது நாட்டுக்குப் பொருத்தமில்லாததைச் செய்வதல்ல. கடந்த கால வரலாற்று மதிப்பீடுகளைப் பாதுகாத்துக் கொண்டு முன் செல்வதே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பழக்க வழக்கங் கள் நமக்குப் பொருத்தமில்லாதது என தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச அறிஞர்களின் நூல்களைப் போன்றே நமது அறிஞர்களினதும் நூல்கள் நமக்குப் பொக்கிஷங்க ளாக உள்ளன. அவற்றைத் தேடிக் கற்பதில் நமது மாணவ சமுதாயம் முன்னிற்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது நாட்டை வெளிநாடு களில் தரங்குறைத்து கூறுவதற்கோ, நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் அதிபர் சந்தமாலி அதுருப்பொல தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சின் செயலாளர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
விசாகா கல்லூரி கீர்த்தி மிகு வரலாற்றைக் கொண்ட கல்லூரியாகும். கல்வியிலும் விவாதங்களிலும் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் நிகழும் நமது நாட்டு சொத்து இது. இக்கல்லூரி கொழும்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. முழு நாட்டினதும் உரிமைச் சொத்தாகும்.
எனது மாணவ பருவத்தில் நான் கற்ற தேர்ஷ்டன் கல்லூரிக்கும் விசாகா கல்லூரிக்குமிடையில் நடைபெறும் விவாதங்களில் நானும் பங்கேற்றிருக்கின் றேன். அக்காலத்திலேயே இக்கல்லூரி தமது திறமையை வெளிக்காட்டியுள்ளது. இக்காலத்திலும் இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள பெறுபேறுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைத் தோற்று விக்கின்றது. 93 வருடம் பழைமை வாய்ந்த இந்த பாடசாலையை ‘கொஸ் மாமா’ என்ற வீரபுருஷர் தனது தாயின் நினைவாக முதலில் நிர்மாணித்து வழங்கினார். அன்றிலிருந்து இந்த கல்லூரி சகல துறைகளிலும் பிரகாசித்து வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Sunday, November 6, 2011 சென்னை முகப்பேரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எங்கள் தோழன்பாச்சா என்று அனைவராலும் அழைக்கப்டும் தங்கமணி தங்கபாஸ்கரன் இன்று (1.11.2011) தனது சிறுநீரக கோளறு காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை சென்னை முகப்பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை(7.11.11) அன்று நடைபெறும்.
யுhழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும்,மக்களின் நலனுக்காவும் பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன்முகத்துடனும்,அவரது இயல்பான நகச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ரிருந்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.
புலிகளின் எதேச்சதிகார போக்கு காரணமாக நெல்லியடி மக்களுக்கான பணியினை அவர் தொடர்வதற்கு தடைகள் பல ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் புலிகளின் அச்சுறுத்தலால் தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்.
தோழர்தங்பாஸ்கரனிடம் இயல்பாகவே பல திறமைகள் புதைந்து கிடந்தன அவற்றை அவர் தமிழகத்தில் வெளிகாட்டினார். 50க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளார். சிறந்த மிருந்தங்க கலைஞராகவும் அவர் செயல்பட்டார். வேதா என்ற சினிமா படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
சிறந்த ஒரு தோழன்,கலைஞன,; தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்காமல், அவனை அடையாளம் தெரியாமல், ஆக்கியவர்கள் இன்று அடையாம் தெரியாமல் போய்விட்டபோதும்,பல திறமைகளை பெற்றிருந்த தோழனின் இழப்பு என்றும் நமது சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாதது.
இவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பாத்தாருக்கு எங்கள் மனமார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் தோழன்,எங்கள் கவலைகளை தனது நகச்சுவை உணர்வு மூலம் பல தடவைகள் மறக்கச் செய்த, அவருக்கு எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி
Sunday, November 6, 2011 சரத் பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டு ள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத் பொன்சேகா இணங்கிவிட்டார்.
அதற்கான உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், “விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தி யிருக்கின்றது.
2010ம் ஆண்டு ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் உச்சக்கட்டத்தில் “பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை” என்ற பிரசாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது. இது அரசாங்கத்திற்கு சார்பான பிரசாரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக் களிப்பதா? என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.
இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன் படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.
பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது.
சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டி ருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை.
சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது.
அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார்.
Sunday, November 6, 2011 பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவையை கூடியளவு பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை கையிலெடுத்து எவரும் செயற்படுவதற்கு உரிமையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
240 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்காலை பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டத்தை செயற்படுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாருடன் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என்றார்.