July 26, 2010 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
July 26, 2010 துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறோம் என்ற உணர்வு ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கப்படுவது சட்டவிரோத குடியேற்றத்தையே ஊக்குவிக்கும் என சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.
வியட்நாமில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் கடத்தல்களை - குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்களையும் பொருட்களையும் கடத்துவதை - முறியடிப்பதற்கு இலங்கை கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
துன்புறுத்தப்படுவதான உணர்வின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்குவது சட்டவிரோத குடியேற்றத்தையே குடியேற்றத்தையே ஊக்குவிக்கும். எனவே பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரப்புகளில் காவலில் ஈடுபடுதல் ஆகியவற்றினால் சட்டவிரோத இடப்பெயர்வுகளையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்க முடியாது எனவும் அவர்பிரதியமைச்சர் குணவர்தன கூறினார்.
பயங்கரவாத அமைப்புகளிடம் எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலும் நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதாகக் கூறிய அவர் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியளிப்புச் செயற்பாடுகள் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகடந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் எனக் கூறினார்.
July 26, 2010 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.