Sunday, March 28, 2010

Sunday, March 28, 2010

மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே -ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன்

வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்















வெளிச்சம்’ மாத வெளியீடு இலண்டன் EPIC நிலையத்தினரால் வெளியிடப்பட்டது

Sunday, March 28, 2010
கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகள, சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் மாத வெளியீடு இலண்டன் EPIC (ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம்) நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.
ஈழமக்கள் செய்தி தொடர்பு நிலையம் இலண்டனிலிருந்து வெளிச்சம் என்ற பெயரில் 4 பக்கங்களை கொண்ட மாத செய்தித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றய அரசியல் நிலவரங்களை குறித்த கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என பல விடயங்களை உள்ளடக்கியதாக மாசி மாதத்திற்கான முதல் வெளியீடு வெளிவந்துள்ளது.
இடதுசாரிகளின் ஒற்றுமை இன்றய அவசியம் என்ற தலைப்பில் திரு லோகநாதன் அவர்களுடைய கட்டுரை தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையுடையவர்களும் இடதுசாரிகளும் இன்றய நிலையில் தமிழ் சமூகத்தின் எதிர்காலம் கருதி நேரம் கடத்தாமல் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் பற்றி எழுதியிருப்பது தேவையான ஒன்றாக உள்ளது. புதுமாத்தளனில் தொலைத்ததை ஐரோப்பாவில் தோண்டுவதா? என்ற ஆதவனின் கட்டுரை, ஐரோப்பாவிலும் கனடாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற என்ற பாதாகையை சுமந்து மக்களை ஏமாற்றும் பொழுது பொக்குக்காரர்களின் நாடியை பிடித்து கோடிட்டுக்காட்டியுள்ளது. பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் என்ற தலைப்பில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு, மற்றும் புலிப்பிரமுகர்கள் எவ்வாறு மக்கள் மத்தியில் பிரச்சாரம செய்தார்கள் என்பதையும் இப்பிரச்சாரங்களின் உள்நோக்கம் வெறுமனே சுயநலமான வெறும் எதிர்ப்புவாத போக்கேயொளிய தமிழ் மக்களின் நலன்களிலிருந்து சிந்திப்பதாக இல்லாததை வெளிப்படுத்தியுள்ள கட்டுரையாக பல விபரண கருத்தாடல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும் கவிதைகள் துணுக்கான சம்பாஷனைகளும் சமகால அரசியல் நிலவரங்களை சுமந்து வந்துள்ள வெளிச்சம் போன்ற ஆக்கங்கள் மென்மேலும் பல நல்ல விடயங்களை சுமந்துவரவேண்டும். வாழ்த்துக்கள்
.
Sunday, March 28, 2010
வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கண்காணிப்பாளர்களை அனு மதிக்க முடியும் என தேர்தல் ஆணை யாளர் தயானந்த திஸநாயக்கா நேற்று அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்த லில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு கண்காணிப் பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.ஒவ்வொரு தேர்தல் கண்காணிப் புக் குழுவில் இருந்தும் ஒருவர் வாக்கு எண்ணப்படும் நிலையங் களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனிடையே எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அகற்றப்படும் என பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய உறுதியளித்துள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.



.
SUNDAY MARCH 28,2010
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவு ? தேர்தல்கள் செயலகம்!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களின் பிரசார கூட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம்அறிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே சட்டவிரோத பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் செயலகத்தினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல்கள் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடரந்;தும் அகற்றப்படாத நிலையில் உள்ளால் தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் உத்திரவிட்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive