
இடம் பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாமல் உள்ள மக்களை துரித கதியில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரிஸ் ஆகியோருக்கிடையே இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அதிகார பரவலாக்கம் குறித்து தமது அரசாங்கம் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் 6 சுற்று பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளன.
பேச்சுவார்தைகளில் கலந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகளும் சில பிரேரணைகளை முன்வைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளதார, இரு நாட்டு சகோதரத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment