
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலும் தமது கவலையை வெளியிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் இதுவரையில் 10 பேர் பலியாகி உள்ளதோடு 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment