
லிபியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களுள் மேலும் 138 பேர் விசேட விமானமொன்றின் மூலம் நேற்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். ரக விமானத்தில் நேற்று பகல் 138 பேரும் நாடு திரும்பினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய இந்த விசேட விமானத்தை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதர் சுதந்த கனேகம ஆராச்சி இவர்களை திரிபோலி விமான நிலையத்திற்கு அழைத்துவந்து வழியனுப்பிவைத்தார்.
இதேவேளை லிபியாவில் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த மேலும் 20 பேரும் நாடு திரும்பினர். நேற்றுக் காலை 8.35 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமொன்றில் இலங்கை வந்தனர்.
ஏற்கனவே 104 பேர் இலங்கை வந்திருந்தனர். இவர்களுடன் இதுவரை 232 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் விசேட விமானம் மூலம் நாளை லிபியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment