
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காக குடாநாடு முழுவதும் இன்று முதல் இரவு இராணுவ ரோந்து நடைமுறைக்கு வருகின்றது என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுறுசிங்க அறிவித்துள்ளார்.
அவர் யாழ்ப்பாண செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
கலந்துரையாடலில், வட பிராந்திய பதில் பொலிஸ் மா அதிபர் சுசில் பெரேரா தகவல் தருகையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றச் செயல்களை தடுக்க மூன்று அம்ச செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சாதாரண உடை தரித்த பொலிஸாரும் பொலிசாரும் இரு பிரிவுகளாக மக்களிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெற்று 24 மணித்தியாலத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தரங்க தகவல்களை தமிழில் வழங்க பொலிஸ் நிலையங்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதி சோதனை, வாகன சோதனை, சந்தேகமானவர்களை விசாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment