
நீதவான்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அதாவுத செனெவிரத்ன கூறுகிறார்.
பனாகொடப் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இடமொன்றைப்பெற்று அங்கு விடுதி வசதியுடன் இரண்டு வருடப் பயிற்சிகளை வழங்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீதவான்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியொன்று இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனூடாக இங்குள்ள நீதவான்களை அங்கு அனுப்பி நீதித்துறை தொடர்பில் அவர்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக்கொடுக்க முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனூடாக மிகவும் தைரியத்துடன் சரியான தீர்ப்புகளை விரைவில் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைக்குமென அமைச்சர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment