
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தமது பதவியேற்றதன் பின்னரான முதலாவது இலங்கை விஜயத்தை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 25 ம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார்.
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கை - இந்திய ஒருங்கிணைப்பு ஆணையக கூட்டத்தில் இந்திய தரப்பின் தலைவராக பங்கேற்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களுக்கு நேரடியாக செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த பிரதேசங்களின் புனரமைப்பிற்கு பங்களிப்பை மேற்கொள்ள இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.
தென்னிந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான சோமன் ஷலி மல்லையா கிருஷ்ணா இந்தியாவின் அரசியலில் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பதுடன் கடந்த 5 தசாப்தங்களாக பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான அமைச்சரவையில் இணைவதற்கு முன்னர், கர்நாடக மாநிலத்தின் தலைமை அமைச்சராக 1999 ம் ஆண்டுமுதல் 2004 ம் ஆண்டுவரை பதவி வகித்துள்ளார்.
அதற்கு முன்னர் மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக 2004 ம் ஆண்டுமுதல் 2008 ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார்.
இந்திய தகவல் தொழினுட்ப துறையின் முக்கிய பங்காற்றும் பங்களுரின் நவீன தந்தையென இவர் கல்விமான்களினால் புகழாரம் சூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment