
1999ஆம் ஆண்டு கொழும்பு நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்த லின் இறுதிக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்ட நபருக்கு 290 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விதித்தார்.
கொழும்பு நகரசபை மண்டப வளவில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்ற வழக்கில் கொழும்பு நீதிமன்றம் சத்தியவேல் இலங்கேஸ் வரன் (வயது 30) என்கிற இளை ஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வின் கண் ஒன்று பறிபோனது. பிர திப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி ஒருவர், பெளத்த பிக்கு ஒருவர், சிவிலியன்கள் ஆகி யோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் சம்பந்தமாக நால்வருக்கு எதிராக கொழும்பு நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டு 2002ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி குற்றப்பத்திர மும் தாக்கல் செய்யப்பட்டது. வேலாயுதன் வரதராஜா (உத யன்),சத்தியவேல் இலங்கேஸ்வரன், பூசகர் எஸ்.ரகுபதிசர்மா, பூசகர் ரகு பதிசர்மாவின் மனைவி சந்திரா ரகு பதி ஆகியோரே வழக்கின் எதிரிகள். இத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினர். 26 பேரின் மரணங்களுக்கும் 80 பேரின் படுகாயங் களுக்கும் காரணமாகினர்.நாட்டின் முதல் பிரஜையை கொல்லச் சதித் திட்டம் தீட்டி இருந்தனர். ஆகியன உட்பட 110 குற்றச்சாட்டுக்கள் இவர் கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
எதிரிகளில் ஒருவரான இலங்கேஸ் வரன்,அவருக்கு எதிரான குற்றச்சாட் டுக்களை ஒப்புக்கொண்டு விட்டார். இத் தற்கொலை தாக்குதலுக்கு தேவையாக இருந்த வெடிகுண்டை புத்தளத்திலிருந்து முஸ்லிம் வர்த் தகர் ஒருவருடைய வாகனத்தில் கொழும்புக்கு கடத்திவந்தார் என்று நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச தண் டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இவ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரி.எம்.பி.வி.வெரவெல இவ ருக்கு நேற்று 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில விஜே வர்தன ஆஜராகி வாதாடி வருகிறார். இவ் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ரவீந்திர டீ சில்வா ஆஜராகினார்.
No comments:
Post a Comment