
தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப்போகிறோம் என்ற தீர்மானம் எடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சிங்கப்பூர் தான் செல்ல வேண்டுமா? நிச்சயமாக இவர்கள் அங்கு நாடு கடந்த தமிழ அரசின் பிரதிநிதிகளை சந்திக்கவே சென்றுள்ளார்கள் என தான் நம்புவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இங்கு பெரும் சிரமத்தில் இருக்கும்போது உல்லாசமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு சிங்கப்பூரில் போய் உல்லாச விடுதியிலிருந்து தான் தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப் போகிறோம் என்பதைப் பற்றி தீர்மானம் எடுக்க சிங்கப்பூர் தானா செல்லவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தி லிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? மட்டக்களப்பில் இருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? திருகோணமலையில் சிறந்த ஹோட்டல்கள் எல்லாம் உள்ளன அங்கிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் கேள்வி எழுப்பினார்.
நிச்சயமாக இவர்கள் வேறு யாரையாவது சந்திக்கத்தான் சென்றிருக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள தமிழர்களை நாடுகடந்த தமிbழம் என்ற ஒரு பிரிவின் அணி திரட்டிக் கொண்டுள்ளனர். இதேவேளை ஜெயானந்த மூர்த்தி உட்பட 28 பேர் நாடு கடந்த தமிbழத்திலிருந்து வெளியேறியுள்ளனர். நாடு கடந்த தமிbழம் என்பது வெறும் வெற்று வேட்டு என்பதை உணர்ந்திருக் கிறார்கள். இதனாலேயே இவர்கள் 28 பேரும் ஒதுங்கியுள்ளனர். இப்படியான ஒரு அணியுடன் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு சேருமாக இருந்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் செயலாகவே அமையும். இதே செயலில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கடந்த காலங்களில் செய்தது, என்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment