
இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். மும்பையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய பொலிஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மஹிந்த ராஜபக்ஷ சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது எழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ. 55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிருபர்களிடம் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழர்கள் தற் போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்க ளுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை. இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலை யானை வேண்டினேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
No comments:
Post a Comment