
போர்ப் பயம் மற்றும் பயங்கர வாதத்திலிருந்து விடுபட்ட ஒரு உலகத்தை தோற்றுவிப்பதற்கு சர்வதேச ரீதியாக உள்ள பெளத் தர்கள் மற்றும் பெளத்த நாடுகளும் ஒத்துழைப் புடன் செயற்பட வேண்டு மென ஜனாதிபதி மகிந்த ராஜபக் தெரிவித்துள்ளார்.
இது தற்காலத்திற்கு ஏற்ற அத்தியாவசிய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிப்போன் சிறிலங்கா கல்வி மற்றும் கலாசார கேந்திரத் தின் பொதுச் செயலாளர் சாஸ்திரபதி மீகஸ்தென்னே சந்திரசிறி தேரருக்கு, சிறி ஜெயவர்த்தனபுர பிரதான சங்க நாயகர் பதவி வழங்கப்பட்டதை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப சார நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்தார்.
இந்த உபசார நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற் றுள்ளது. இதன்போது மீகஸ் தென்னே சந்திரசிறி தேரர், கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment