
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய நூல் முதன் முறையாக தமிழில் வெளி வந்துள்ளது. இந்நூலுக்கு ‘மஹிந்த’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்களை துன்புறுத்திய பயங்கர வாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமை யாகவும், புரிந்துணர்வுடனும் வாழ வழியமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு தமிழ் மக்கள் சார்பாக
நன்றியினைத் தெரிவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவயது முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான மஹிந்த ராஜபக்ஷவின் விசேட நிகழ்வுகள் இந்நூலில் வர்ணப் புகைப் படங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
நாட்டின் சகல இன மக்களினதும் மனிதாபிமான உரிமைகளை பெற்றுக் கொடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி தமிழ் மக்கள் கூறும் கருத்துகளும் இந்நூலில் உள்ளடக் கப்பட்டுள்ளன.
தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியரான எஸ். தில்லைநாதனினால் இந்த வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற் பிரதி கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நூலாசிரியர் தில்லைநாதனால் கையளிக் கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும், எஸ். தில்லைநாதனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment