
பொருளாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் யாங் சுப்பிங்கும், நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதேவேளை, சீன ஜனாதிபதி ஹீ ஜின்டாவோவின் விசேட பிரதிநிதி சான் கோவுவேய் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவிலும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment