
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான ரொபர்ட் பிளெக்கின் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
இதேவேளை, இலங்கை அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் அமெரிக்காவில் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் கூறியது.
No comments:
Post a Comment