
வன்முறை , பிரிவினை ஆகியவற்றைத் தூண்டும் வகையில் பேசினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானைத் தேடி தமிழ் நாட்டு பொலிஸார் வலை வீசி வருகின்றார்கள்.
அவர் தலைமறைவாகி உள்ளார் எனப் பொலிஸார் நம்புகின்றார்கள். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றமையைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தியாவில் உள்ள சிங்களவர்களுக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்து சீமான் அதில் பேசியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது வன்முறை, பிரிவினையை ஆகியவற்றைத் தூண்டும் வகையில் பேசினாரென சீமான் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சீமானைக் கைது செய்கின்றமைக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குப் பொலிஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. அவரது செல்போனும் செயலிழந்த நிலையில் உள்ளது. இதையடுத்து பொலிஸார் நான்கு தனிப்படைகளை அமைத்து சீமானைக் கைது செய்ய தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment