Sunday, June 27, 2010

மனிதச் சடலத்தை கடலுக்குள் வீச முயற்சி! பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைது!

Sunday, June 27, 2010
மனிதச் சடலம் ஒன்றை புத்தளக் கடலுக்குள் வீச முயன்றனர் என்கிற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உட்பட இருவர் இன்று மாலை முடலகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு 119 இரகசிய தொலைபேசி இலக்கம் மூலம் வழங்கிய தகவலை அடுத்து இக்கைதுகள் இடம்பெற்றன. குற்றச்செயலை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட டபிள் கப் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. மற்றச் சந்தேக நபர் வெள்ளவத்தையில் வசிப்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தியப் பிரஜையான தங்கராசா செல்வராசு என்கிற நடுத்தர வயது உடைய நபரின் சடலத்தையே இருவரும் கடலுக்குள் வீச முயன்றிருக்கிறார்கள் என்பதைப் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வந்த தங்கராசா செல்வராசு காலையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டார் என்று சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸாருக்குத் தெரிவித்தனர். ஆனால் சடலத்தை ஏன் அவர்கள் புத்தளத்துக்கு கொண்டு வந்து வீச முயன்றனர் என்பது இன்னமும் கண்டுபடிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

Followers

Blog Archive