
கொழும்பு, புறக்கோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது ஒன்பது பொதுமக்கள் வரை காயம் அடைந்துள்ளார்கள். இது ஒரு கைக்குண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வருடம் புலிகள் இயக்கம் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்ற முதலாவது வெடிகுண்டுத் தாக்குதல் இதுவே ஆகும். ஆனால் இத்தாக்குதலுடன் புலிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று உடனடியாக முடிவெடுக்க முடியாதுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment