
பேங்காக்
தாய்லாந்து ராணுவப் படையினருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் சனிக்கிழமை நடந்த கடுமையான மோதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தொலைக் காட்சிப் புகைப்படக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜப்பானிய நாட்டவரான 43 வயது ஹிரோ முராமோட்டோ நெஞ்சில் சுடப்பட்டிருந்தார். கிளாங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபோது நாடித்துடிப்பு இல்லை என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிச்சாயா நக்வட்சாரா தெரிவித்தார்.
தோக்கியோவிலுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 15 ஆண்டு களுக்கும் மேலாக வேலை செய்துவரும் முரா மோட்டோவுக்கு மணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
“பேங்காக் மோதலில் எங்களது சக ஊழியர் ஹிரோ முராமோட்டாவை இழந்ததில் பெருந்துயரம் அடைகிறேன். செய்தித்துறை மிகவும் ஆபத்தான தொழி லாகும். ராய்ட்டர்ஸ் குடும்பம் முழுவதும் இத்துயரத்தை நினைத்து வேதனைப்படுகிறது” என்று ராய்ட்டர்ஸின் தலைமை ஆசிரியர் டேவிட் ஷ்லிசிங்கர் கூறினார்.
ராஜ்தம்னோன் சாலை யில் ராணுவப் படைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையை முரா மோட்டோ படமெடுத்துக் கொண்டிருந்தபோது, ராணுவத்தினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டதோடு, உண்மையான தோட்டாக்களை விண்ணை நோக்கியும் சுட்டனர்.
முராமோட்டோவின் நெஞ்சில் பாய்ந்த தோட்டா அவரது முதுகின் வழி வெளியேறிவிட்டது. அதனால் அவரைத் தாக்கியது எந்த வகை தோட்டா என்பது தெரியவில்லை என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்த தாகவும், பெட்ரோல் குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் ராணுவத் தினர் மீது வீசியதாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment