
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலைக் கட்டடத்திலிருந்து, மாணவரை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் மாணவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்டிடத்தில் நீர் வசதிகள் உட்பட பல வசதியீனங்கள் மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் தலைவர் புத்திக திசாநாயக்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக வினவியபோது பல்கலைக்கழகத்தில் தண்ணீர்ப் பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொண்டார்.
நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின்போது மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment