
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் நாளை 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற 16ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவிருக்கின்றார்.
2008ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைப்பார். 16ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment