Monday, April 12, 2010

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு

Sunday, 11 April 2010

புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது,

பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்ப டுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.

வாக்காளர்களுக்கு நன்றி

Sunday, 11 April 2010

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Saturday, April 10, 2010

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம்


SATURDAY, APRIL 10, 2010
வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்Zர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.
இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்Zர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.
இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.
இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.

Friday, April 9, 2010

FRIDAY, APRIL 09, 2010பொதுத் தேர்தல் 2010மாவட்ட முடிவுகள்

கட்சி கட்சி முழுப் பெயர்
ஐ.ம.சு.கூ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஐ.தே.க ஐக்கிய தேசியக் கட்சி
இ.த.அ.க இலங்கைத் தமிழரசுக் கட்சி
ஜ.தே.கூ ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு


மாவட்டம் ஆசனங்கள் தேர்தல் மாவட்ட முடிவுகள்
அநுராதபுரம்
08 ஐ.ம.சு.கூ 221,204 7
ஐ.தே.க 80,360 2

66.52% 24.17%
-------------------------------------------------------------------------------------------------
பதுளை
07 ஐ.ம.சு.கூ 203,689 6
ஐ.தே.க 112,886 2

58.25% 32.28%
-------------------------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு
04 இ.த.அ.க 66,235 3
ஐ.ம.சு.கூ 62,009 1
ஐ.தே.க 22,935 1

36.67% 34.33% 12.70%
-------------------------------------------------------------------------------------------------
கொழும்பு
18 ஐ.ம.சு.கூ 480,896 10
ஐ.தே.க 339,750 7
ஜ.தே.கூ 110,683 2

51.19% 36.17% 11.78%
-------------------------------------------------------------------------------------------------
திகாமடுல்ல
06 ஐ.ம.சு.கூ 132,096 4
ஐ.தே.க 90,757 2
இ.த.அ.க 26,895 1

51.41% 35.32% 10.47%
-------------------------------------------------------------------------------------------------
காலி
09 ஐ.ம.சு.கூ 305,307 7
ஐ.தே.க 120,111 2
ஜ.தே.கூ 33,663 1

66.17% 26.03% 7.3%
-------------------------------------------------------------------------------------------------
கம்பஹா
17 ஐ.ம.சு.கூ 589,476 12
ஐ.தே.க 266,523 5
ஜ.தே.கூ 69,747 1

63.37% 28.65% 7.5%
-------------------------------------------------------------------------------------------------
அம்பாந்தோட்டை
06 ஐ.ம.சு.கூ 174,808 5
ஐ.தே.க 83.027 2

62.87% 29.86%
-------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணம்
08 இ.த.அ.க 65,119 5
ஐ.ம.சு.கூ 47,622 3
ஐ.தே.க 12,624 1

43.85% 32.07% 8.50%
-------------------------------------------------------------------------------------------------
களுத்துறை
09 ஐ.ம.சு.கூ 313,836 7
ஐ.தே.க 139,596 2
ஜ.தே.கூ 36,722 1

63.68% 28.32% 7.45%
-------------------------------------------------------------------------------------------------
கண்டி
11




-------------------------------------------------------------------------------------------------
கேகாலை
08 ஐ.ம.சு.கூ 242,463 7
ஐ.தே.க 104,975 2

66.89% 28.95%
-------------------------------------------------------------------------------------------------
குருணாகலை
14 ஐ.ம.சு.கூ 429,316 10
ஐ.தே.க 213,713 5

63.84% 31.78%
-------------------------------------------------------------------------------------------------
மாத்தளை 04 ஐ.ம.சு.கூ 131,069 4
ஐ.தே.க 55,737 1

66.96% 28.47%
-------------------------------------------------------------------------------------------------
மாத்தறை
07 ஐ.ம.சு.கூ 213,937 6
ஐ.தே.க 91,114 2

65.31% 27.81%
-------------------------------------------------------------------------------------------------
மொனராகலை
04 ஐ.ம.சு.கூ 120,634 4
ஐ.தே.க 28,892 1

75.64% 18.12%
-------------------------------------------------------------------------------------------------
நுவரெலியா
06 ஐ.ம.சு.கூ 149,111 5
ஐ.தே.க 96,885 2

56.01% 36.39%
-------------------------------------------------------------------------------------------------
பொலொன்னறுவ
04 ஐ.ம.சு.கூ 118,694 4
ஐ.தே.க 45,732 1

69.22% 26.67%
-------------------------------------------------------------------------------------------------
புத்தளம்
07 ஐ.ம.சு.கூ 167,769 6
ஐ.தே.க 81,152 2

64.83% 31.36%
-------------------------------------------------------------------------------------------------
இரத்தினபுரி
09 ஐ.ம.சு.கூ 305,327 7
ஐ.தே.க 125,076 3

68.86% 28.21%
-------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை 03


------------------------------------------------------------------------------------------------


வன்னி 05 இ.த.அ.க 41,673 3
ஐ.ம.சு.கூ 37,522 2
ஐ.தே.க 12,783 1

38.96% 35.07% 11.95%

முதலாவது தேர்தல் முடிவு வெளியாகியதுFRIDAY, APRIL 09, 2010


மாத்தறை மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

ஐ.ம.சுமு – 10,560 வாக்குகள்

ஐ.தே.க – 3,041 வாக்குகள்

ஜ.தே.கூ - 1,439
-------------------------------------------------------------------------------------
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்


ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்

ஐ.தே.க – 3,010 வாக்குகள்

ஜ.தே.கூ - 696 வாக்குகள்
-------------------------------------------------------------------------------------
தேர்தல் முடிவு , மட்டக்களப்பு மாவட்டம் தபால் வாக்குகள்
விடுதலைமுன்னணி 2,254 37.13%
ஐக்கிய தேசிய கட்சி 671 11.05%
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 318 5.24%
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 141 2.32%
ஈழவர் ஜனநாயகமுன்னணி 30 0.49%
ஜனநாயக தேசிய முன்னணி 17 0.28%

-------------------------------------------------------------------------------------------------

Thursday, April 8, 2010

THURSDAY, APRIL 08, 2010


நாடாளுமன்றத் தேர்தலில் 51-55 வீத வாக்குப்பதிவு

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில் 51 முதல் 55 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.
அந்நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மிர் சற்றுமுன்னர் இத்தகவலை எமக்கு உறுதிப்படுத்தினார்.
ஏனைய கண்காணிப்பு நிலையங்களின் தகவலின் படி 55 வீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவுகளே இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 22 மாவட்டங்களில் 7620 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 336 கட்சிகளும் 301 சுயேட்சை கட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் அமைதியான முறையில் தேர்தல்

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்

யாழ் மாவட்டத்தில் மந்தகதியில் வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு வீதம் மந்தகதியில் இடம்பெற்றுவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் 11 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பகல் கடந்துவிட்ட நிலையிலும் கூட வாக்களிப்பில் சுறுசுறுப்பு காணப்படவில்லை எனவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன

புத்தளத்தில் 33 வீதமான வாக்குப்பதிவு


புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 33 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் இடபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
.

யாழ் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு


யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இன்று மாலை 6 மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
.

ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் வாக்களித்தார்



2010 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வாக்கினை அம்பாந்தோட்டை டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் பதிவு செய்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது

நேரகாலத்தோடு வாக்களியுங்கள்

THURSDAY, APRIL 08, 2010
நேரகாலத்துடன் வாக்குச்சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும் அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஆணையாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
வாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும் ஆளடையாள த்தை நிரூபிக்கும் அடையாள அட்டையையும் தம்முடன் வாக் குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல வேண் டும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
குளறுபடிகள், குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் கிடைக்கும் பட்சத் தில் குறித்த வாக்குச்சாவடியில் மேற்கொண்ட வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுமென்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்
.

196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்

THURSDAY, APRIL 08, 2010
ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.
இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.
இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.
தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.
வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
வெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.

Wednesday, April 7, 2010

WEDNESDAY, APRIL 07, 2010




WEDNESDAY, APRIL 07, 2010


எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க செல்லுங்கள்
எந்தவிதமான அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் வாக்களிக்கச் செல்லுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட படி உச்ச கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலின் போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்க பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையா ற்றுகையில், தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கு இணங்க அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்த தேவையான சகல ஒத்துழைப்புக்களை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வழங்குவர்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கண்டிப்பாக அமுல்படுத்தத் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதன் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பாதுகாப்பு கடமையில் 58 ஆயிரத்திற்கு அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக 19,800 முப்படையினர்கள் மற்றும் 2 ஆயிரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் காலத்தின் போது பாரிய அசம்பாவிதங்களோ வன்முறைச் சம்பவங்களோ இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் இதுவரை 298 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பட்டார்.
298 முறைப்பாடுகள் தொடர்பாக 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 206 பேர் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் சகல பொலிஸ் நிலையங்களையும் அண்மித்த பகுதியில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இதன் மூலம் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்க முடிவதுடன் ஆயுதங்களுடன் நடமாடுபவர்களை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்

WEDNESDAY, APRIL 07, 2010

முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி

பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் முதற் தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல்கள் கண்காணிப்பு பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல்களை வாக்குச் சாவடிகளுக்குள் இருந்தபடி கண்காணிப்பதற்கு தேர்தல் செயலகம் இவ்விரு ஸ்தாபனங்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே.
இதேவேளை பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியின் வரையறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஹெட்டியாராச்சி கூறினார்.
தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிக்கும் பணியில் 24 பேர் ஈடுபடுத்தப்படுவர். இவர்களில் 22 பேர் மாவட்டத்திற்கு ஒருவர் படியும், இருவர் தேர்தல் செயலகத்திலும் பணியில் ஈடுபடுவர்.

Monday, April 5, 2010

MONDAY, APRIL 05, 2010

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள்- தோழர் வரதராஜப்பெருமாள்.(ITN WEB)

தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள், வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகவியளாளர் தீபச்செல்வன் என்பவருக்கு வழங்கிய செவ்வி.....

தீபச்செல்வன் : இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தீர்கள். இணைந்திருந்த தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு தற்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை பெற்றது மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு வெற்றியாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது எதுவுமற்ற ஒரு தோல்வி நிலையில் நாம் இருக்கிறோம் என நினைக்கிறேன். இந்த அடிப்படையில் நீங்கள் முதலமைச்சராக இருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை எப்படி பார்க்கிறீர்கள்?

வரதராஜப்பெருமாள் : எமக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக அதை நான் பார்க்கிறேன். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தமிழ் மக்கள் தவறிவிட்டார்கள் என்பதுதான் மிக கவலைக்குரிய விடயம். அது மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாண சபையை சீரழித்து இல்லாமல் பண்ணுவதிலும் எம்மில் ஒரு பகுதியினர் அந்த நோக்கம் கொண்ட சிங்களவர்களில் ஒரு பகுதியினருக்கு ஒத்துழைத்து விட்டார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம்.

அதன் பின்னர் சில வருடங்களுக்கு முன்பு ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு இன்று வட மாகாணம் வேறு கிழக்கு மாகாணம் வேறு என்று போய் விட்டது. வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர்களுடைய தாயகம் என்பது தமிழர்களின் 50 வருடக் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றினோம்.

அது மட்டுமல்ல திருகோணமலைதான் தமிழர்களின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் 50 வருடக் கனவுகளாக இருக்கின்றன. அதையும் நாங்கள் நிறைவேற்றினோம். அந்த நிறைவேற்றப்பட்ட கனவுகள் மீண்டும் கனவுகளாகவே கலைந்து விட்டன. உடனடியாக வடக்கு கிழக்கு இணைந்த சபையை பெற முடியுமா என்பதில் பல சந்தேகங்கள் உளளன. அந்தக் காலகட்டம் வர வேண்டும் அதை சிங்கள மக்களும் ஏற்க வேண்டும். அதை சிங்கள தலைவர்களும் ஏற்க வேண்டும்.

தமிழர்களும் அதற்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். வெறுமனே வடக்கு கிழக்கு மாகாண சபை இணைக்கப்படுவதல்ல. அதிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதில் முஸ்லீம் மக்களுக்கு சில அச்சங்கள் இருக்கின்றன. அவர்களது அச்சத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்தால் சிங்கள மக்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்று அவர்களுக்கும் அச்சம் இருக்கிறது. இல்லை பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை நாங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு நிறைந்த அதிகாரத்தை கொடுத்தால் அது பிரிவினைக்கு வழி வகுக்குமே என்று சிங்கள மக்களுக்கு அச்சம் ஏற்படலாம். ஆப்படி நடக்காது இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருந்தால் இந்த நாட்டுக்கு இன்னும் ஒற்றுமைக்கு அது வழி வகுக்கும் என்று நம்ப வைக்க வேண்டும். அப்படியான சூழல் ஏற்படும் பொழுது மீண்டும் ஒரு வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க முடியும். இதில் இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. மாநில அரசுக்குரிய நிர்வாக திறமை, வல்லமை கொண்ட தமிழர்களை எல்லாம் அந்த மாகாண சபை கொண்டிருந்தது. அப்படி பட்டவர்கள் மீண்டும் வர வேண்டும்., செயற்பட வேண்டும்., அப்படி பட்டவர்கள் தமிழ் சமூதாயத்தில் உருவாக வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் அவ்வாறான நிர்வாக திறமை கொண்ட தமிழர்களின் வளர்ச்சி என்பது குன்றிப் போய்விட்டது. கல்வியில் வளர்ச்சி கொண்ட இளைஞர்கள் இங்கு படித்து விட்டு வெளிநாடு செல்லும் நிலமை ஏற்பட்டு விட்டது. இந்த நாட்டிலுள்ள மக்களினுடைய வளர்ச்சிக்கும் தமிழர்களுடைய வளர்ச்சிக்கும் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பாடுபடும் வகையில் முன்னேற்றமுள்ள இளைஞர்கள் வரவேண்டும். அப்படி வருகிற போது சுயாட்சியுடைய நிறைந்த அதிகாரங்களைக் கொண்ட மாநில அமைப்பை கொண்டு வந்தால் அது தமிழர்களுக்கு பயன்படும்.


தீபச்செல்வன் : நீங்கள் ஈழப் பிரகடனம் ஒன்றை செய்து விட்டு இந்தியாவுக்கு சென்றிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் திரும்பி வந்துள்ள சூழலில் மகிந்தராஜபக்ஷ ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை முன் வைக்கிறார். எதையும் வழங்காமல் மக்கள்சபை பற்றிக் குறிப்பிடுகிறார். அப்படி இருக்க அதிகாரப்பரவலாக்கம், நிருவாகப்பரவலாக்கம் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணசபை எந்தளவு சாத்தியத்தை கொண்டிருக்கிறது?

வரதராஜப்பெருமாள் : முதலில் நான் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள், படித்த மாணவர்கள், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அரசியலில் ஆற்றல் கொண்ட அறிவு கொண்டவர்கள் நான் ஈழப் பிரகடனம் செய்ததிற்கு முதலில் என்னால் முன் வைக்கப்பட்ட 19அம்சக் கோரிக்கையை வாசிக்க வேண்டும். அதை மறைப்பதற்காகத்தான் பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் என்று பிரேமதாசா பிரசாரம் செய்தார். பிரேமதாசாவுக்கு அதில் ஒரு நோக்கம் இருந்தது.

19 அம்சக் கோரிக்கையை உலகம் அறிய விடாது தடுப்பது அவரது நோக்கமாக இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகளும் அந்த நியாயமான கோரிக்கையை தமிழர்கள் அறியாமல் பண்ணி விட்டார்கள். அவர்கள் அதை கொச்சைப் படுத்துவதற்காக பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் ஓடிவிட்டார் என்றார்கள். பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தது சரியா பிழையா எனறு சொல்லவில்லை. ஓடிவிட்டார் என்பதற்காகவே அவர்கள் முக்கியத்துவம் படுத்தினார்கள். அதனால் மீண்டும் இன் அந்தப் 19 அம்சக் கோரிக்கையை வாசிக்கும்படி தமிழ் மக்களை, கல்விமான்களை, அரசியல் ஆர்வம் கொண்டவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு கிழக்கு இணைப்பது மீண்டும் சாத்தியமா எனறு கேட்டீர்கள். இலங்கையில் ஒற்றை ஆட்சிக்குள் எவ்வளவு அதிகபட்ச அதிகாரங்களை எடுக்க முடியுமோ அதை நாங்கள் எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் சமஷ்டிக்காக போராட வேண்டும். சமஷ்டி வரும்வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது. தனிநாடு கிடைக்கும் வரை எதையும் ஏற்க மாட்டோம் என்று கூறி கடைசியாய் இருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தையும் கோட்டை விட்டு விட்டோம். மீண்டும் சமஷ்டி கிடைக்கும் வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது.


13ஆவது திருத்தச் சட்டம் ஒற்றை ஆட்சிக்குள்தான் இருக்கிறது. இன்று ஐக்கிய ராய்ச்சியத்தில் பிரிட்டன், ஸ்கொட்லன்ட் இருக்கிறது. வேல்ஸ் இருக்கிறது. வடஅயர்லாந் இருக்கிறது. அவை எல்லாம் நிறைந்த அதிகாரங்களுடன் இருக்கின்றன. உங்களுக்கு தெரியும் ஸ்கொட்லாந்துக்கு தனி கிரிக்கட் அணியே உள்ளது. இந்தியாவில் கூட இல்லை. அமெரிக்கா கூட இதற்கு ஒத்துழைக்காது. ஆனால் பிரிட்டிஷ் ராஜ்சியம் ஒற்றையாற்சிக்குள் உட்பட்டது.

இந்தியா சமஷ்டி அமைப்பு கொண்டதல்ல. சமஷ்டி மாதிரியான அமைப்பு கொண்டது. அங்குகூட ஒரு முதலமைச்சர் என்பது நிறைந்த அதிகாரம் கொண்ட பதவி. தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் முப்படைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு லட்சம் பொலிஸ்படைகள் உள்ளன. விவசாயத்தில் எதை செய்ய வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். எந்த வீதியில் வீடுகள் போட வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். உள்ளுராட்சி மன்றங்கள் அவருடைய அதிகாரம். இப்படி ஒற்றை ஆட்சிக்குள்ளேயும் மிக உயர்ந்த பட்ச அதிகாரங்களை நாம் பெற முடியும்.

அவற்றைப் பெறுவதில் தவறில்லை. பெற்ற பின்னர் ஒன்றையும் கேட்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பெறக்கூடியது எல்லாம் பெற வேண்டும். இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நான் அதை தரமாட்டேன். போலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என்று சொலல்லாம். அவர் எதை தரமாட்டார் என்பதில் நாங்கள் நேரத்தை செலவழிக்க தேவையில்லை. அவர் எதை தரத் தயாராக இருக்கிறார் என்று கேளுங்கள். அதை முதல் கையில் எடுப்போம்.

பின்னர் அவர் தரத் தயாராக இல்லாததைப் பற்றி அவருடன் பேசிக் கொள்ளலாம். அல்லது அவர் நாளை பதவியில் இல்லாமல்போய் இன்னொரு ஜனாதிபதி வரும் பொழுது அவர் அவற்றை தரக்கூடும். இது ஜனநாயகத் தேர்தல் அமைப்பு. இதில் பல உறவுகளும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எல்லாம் புரிந்து கொண்டு நீண்டகால இலக்கோடு இந்த அதிகாரப் பரவலாக்கத்தை பெறுவதில் தமிழ் மக்கள், தமிழ் தலைவர்கள் செயற்பட வேண்டும்.

தீபச்செல்வன் : மே 17 இன் பின்னர் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிந்து போயிருந்தது. தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் மேலும் தேவைப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அதற்கான அவசியத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

வரதராஜப்பெருமாள் : என்றுமே ஒற்றுமைப் படுவதற்கான அவசியம் இருந்திருக்கிறது. ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொரு விரல்களுக்கும் தனித்தனி பலம் இருக்கிறது. இதை நான் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த காலத்திலும் அதற்கு முன்பும் ஒற்றுமை பற்றிச் சொல்லுகிறபோது நான் குறிப்பிட்ட உதாரணம். ஐந்து விரல்களில் பெருவிரல் மிகப் பலமானது. அதற்காக மிச்சம் நாலு விரல்களையும் வெட்டி விட முடியாது. பெரு விரலை மட்டும் வைத்திருந்தால் அது கையாகாது. அதுதான் ஒற்றுமை. அது மே 17இற்கு பிறகு மட்டுமல்ல தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் அது தேவைப்படுகிறது.

83 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழ தேச விடுதலை முன்னணி என்ற ஒன்றை உருவாக்க எவ்வளவோ பாடுபட்டு உருவாக்கினோம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, ஈரோஸ் என்று சேர்ந்து அதற்கு பிறகு புளொட், தமிழர் கூட்டணியுடன் அதை விரிவாக்க முயற்சித்தோம். அதற்கிடையில் புலிகளும் தாங்களாக முன்வந்து இணைந்தார்கள். எங்களை முதலில் சேருங்கள் என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் என்று சொன்னோம்.

பிறகு வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த காலத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்த்தின் பிறகு நாங்கள் மட்டும் மாகாண சபையை அமைக்கவில்லை. தமிழர் கூட்டணியை எத்தனையோ தடைவ கேட்டோம். நீங்கள் வந்து தேர்தலில் போட்டியிடுங்கள். நீங்கள் வந்து மாகாண ஆட்சியை நடத்துங்கள் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறோம். அப்பொழுது விடுதலைப் புலிகள் அதற்கு தயாராக இல்லாமல் பயமுறுத்திக் கொண்டிருந்ததினால் களத்து வேலைகளை நாங்கள் பார்க்கிறோம் என்றோம்.

மற்ற இயக்கங்களையும் கேட்டோம். ஆக ஈ.என்.டி.எல்.எப் மட்டுமே தயாராக இருந்தது. அதேவேளை முஸ்லீம் கட்சிகளை கேட்டோம். அதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மட்டுமே அதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது மகாணசபையை எதிர்த்திருந்த எஸ்.எல்.பி, ஜே.வி.பி ஐயும் தேர்தலில் பங்கு பெறக் கேட்டோம். மகாணசபையில் நாங்கள் குழுநிலைப் போக்குடையவர்களாக நடந்து கொள்ளவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் ஊடன் மிக அணைவாகவே நடந்து கொண்டோம். அதற்கு பின்னர் அவர்கள் எங்களைப் பற்றி தவறான பிரசாரங்களை செய்தது வேறு விடயம்.

அந்த மாகாண சபையை எப்படியாவது குழப்பி விடுவதற்கு பிரேமதாசா முயற்சித் பொழுது புலிகளும் அதற்கு ஒத்துழைத்தார்கள். புலிகளுடனும் நாங்கள் பகிரங்கமாக கோரினோம். மகாணசபையில் எங்களிடமிருக்கும் 38 உறுப்பினர்களுக்கும் உரிய ஆசனங்களையும் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்று. அப்பொழுதும் அவர்கள் விட்டுக் கொடுத்து ஒற்றுமைக்காக தயாராக இல்லை. அவர்கள் வெறும் பெருவிரல் மட்டும் போதும் மற்ற விரல்கள் எல்லாம் வெட்டி விட வேண்டும் என்று நினைத்தார்கள்.

இப்பொழுதும் சொல்லுகிறேன். தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். ஆனால் அது தேர்தல் கால ஒற்றுமையை நான் சொல்லவில்லை. தமிழர்களது உரிமைக்கான குரலை ஒலிப்பதற்கான ஒற்றுமை. அரசாங்கத்திற்கு முன்னாலும் சரி, இந்தியாவுக்கு முன்னாலும் சரி, உலக நாடுகளுக்கு முன்னாலும் சரி, நாங்கள் ஒற்றைக் குரலில் ஒலிப்பதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தேர்தல் வரும் பொழுது நீங்கள் ஐம்பது கட்சிகளாக நின்று போட்டி போட்டுக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு கவலை கிடையாது. ஏனென்றால் அது ஒவ்வொருவரது ஜனநாயக உரிமை. யாரை தெரிவு செய்வது என்பது தமிழ் மக்களின் உரிமை. அரசியலை முன்னேற்ற பொருளாதாரத்தை முன்னேற்ற சாதியப் பிரச்சனையை ஒழிக்க நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.

தீபச்செல்வன் : 80 களில் நடந்த தமிழ் தேசிய இராணுவ உருவாக்கதில் பொழுது நீங்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதைப்போல பின்னர் தமீழ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் பொழுது அதை நீங்கள் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்? இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு?

வரதராஜப்பெருமாள் : முதல் கட்டமாக நாங்கள் பலபேரை இணைத்திருந்தோம். மூவாயரம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தில் அந்த மூவாயிரம் பேரை அங்கரித்து உடனடியாக ஒரு தொண்டர் படையை அமைக்க திட்டமிட்டோம். குடிமக்கள் படை எனறு அதற்கு பெயர் வைத்தோம். அது சட்ட விரோதமான படையல்ல. அதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் நெருக்கடி ஒன்று ஏற்பட்ட பொழுது மீண்டும் நாங்கள் அரசாங்கததிடம் கேட்டோம்.

அப்பொழுது 64 ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்தார்கள். நாங்கள் அதில் 20 ஆயிரம் பேரை தமிழ் பேசும் மக்கள் சார்பாக கேட்டோம். அப்பொழுது நாங்கள் கணக்கு பார்த்த பொழுது .06 வீதம்தான் தமிழர்கள் இராணுவத்தில் இருந்தார்கள். அப்பொழுது 27 ஆயரம் பேர் இலங்கையல் பொலிஸ் பதவியில் இருக்கும் பொழுது 9 ஆயிரம் பேரையாவது தமிழ் பேசும் மக்களிலிருந்து சேர்த்துக் கொள்ள கோரியிருந்தோம். அவர்கள் அதை மறுக்க முடியாது ஒத்துக் கொண்டார்கள். ஆனால் எங்களிடம் ஆட்கள் இல்லை. அதேவேளை மாநல ஆட்சிக்கும் மாநில ஆட்சி அமைக்க பொலிஸ் படைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டன. இதற்காக ஆட்களை விரைவாக திரட்ட வேண்டிய தேவை இருந்தது. அது மாகாண சபையின் முடிவாக இருக்கவில்லை. அது கட்சியின் முடிவாகவே பலவநதாமாக ஆட்சேட்பு நடந்தது.

பலவந்தமாக ஆட்களைப் பிடிப்போம். பிறகு பிரச்சாரம் செய்வோம். அதில் விலகுபவர்கள் விலகலாம். அப்படியான முயற்சியை பல கட்சிகள் செய்தன. அன்று தமிழ் மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசுடன் எதிர் கொள்ளக்கூடிய மாநில படையை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். அதில் பல நடமுறைத் தவறுகள் உள்ளன. யதார்த்தத்தில் அப்படி வைத்து செயற்படுத்த முடியுமா என்பது பின்னர் பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது.

ஆனால் விடுதலைப் புலிகள் இளைஞர்களைப் பிடித்து இரண்டு வாரம் பயிற்சி கொடுத்து போர்க்களத்தில் அவர்களை முன்னரண்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிநாட்டுக்காக போராடுகிறோம் என்பதற்காக பொருத்தமான போர் வீரர்களாக மாற்றாமல் முன்னுக்கு போ என முன்னுக்கும் மரணம் பின்னுக்கும் மரணம் என நிலமை இருந்தது. அதை எதிர்த்து பெற்றோர்கள் போன பொழுது முன்னர் பெற்றோர்கள் போன பொழுது பல இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

இங்கு பெற்றோர்களே விடுபட முடியாமல் போனார்கள். இறந்த முப்பதாயிரம் பேரில் 29 ஆயிரம் பேர்தான் தமீழம் கிடைக்கும் என நம்பியிருப்பார்கள். தமீழம் கிடைக்காது என்று நம்பாதவர்களாலேயே இவர்கள் இப்படி கையாளப்பட்டார்கள். இது இரண்டும் ஒரே விடயமாக குறிப்பிட முடியாது. இதில் முழுச் சமுதாயமுமே அவலத்தை சந்தித்தது. நாங்கள் செய்த பரிசோதனை வேறு இப்படியான பரிசோதனை வேறு. இப்படியான பரிசோதனைகள் இனியும் நடக்க கூடாது.

தீபச்செல்வன் : நீங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோனவர் என்ற கூறப்படுகிறது அதைப் பற்றி குறிப்பிடுங்கள்?

வரதராஜப்பெருமாள்: இந்தியா எனக்கு துணை செய்தது உன்மை ஆனால் நான் இந்தியாவுக்கு துணை செய்யவில்லை. இந்தியா பெரிய நாடு. 1200 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு. அந்த நாட்டுக்கு என்னைப்போன்ற தனி மனுசன் துணை செய்ய வேண்டுமா? 15 லட்சம் படை வீரர்கள் அவர்களிடம் இருக்கின்றன. நான் அவர்களிடம் துணை போகவில்லை. அது பொய்யான கருத்து. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக இந்தியாவை பயன்படுத்த வேண்டும். அதைக் குறித்து என்னால் இந்தியாவுடன் பேச முடியும்.


தீபச்செல்வன் : தமிழ் மக்களின் அரசியலில் எதாவது தொடர்ந்து செய்யும் எண்ணங்கள் இருக்கின்றதா?

வரதராஜப்பெருமாள் : தமிழ் மக்களின் அரசியலில் எதிர்காலத்தில் முன்னேற்ற கரமான மாற்றத்தை செய்ய இருக்கிறேன். இலங்கையில் அரச முறையில் ஒருமாற்றம் வரவேண்டும். 87 இற்கு முன்பு ஒரு பாராளமன்றம், 87 இன் பின்னர் ஒரு மாகாணசபை என்று மாற்றம் பெற்றது. அது ஒரு ஆட்சி முறையினுடைய வளர்ச்சி. ஏங்கள் கோரிக்கை எல்லாம் மாகாணங்களுக்கு அதிகாரம் போதாது. ஏனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. இந்த மாகாண சபைக்கான அதிகாரங்களை பெறுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது. சேயற்பட வேண்டும். போராட வேண்டும். சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அடுத்த கட்ட சமூதாய வளர்ச்சியில் எனது பாத்திரமும் இருக்கும்.

MONDAY, APRIL 05, 2010

வெளிநாட்டு கண்காணிப்பாளர் பணி ஆரம்பம்; 19பேர் களத்தில்
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திரு ப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து 16 பேர் இலங்கை வந்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப் பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இவர்கள் இருவர் வீதம் எட்டுக் குழுக்களாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண் காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சி. எம். ஈ. வி. அமைப்பு இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்திருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, சுமார் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கென 565 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி, பெப்ரல் அமைப்பு 11,000 க்கும் மேற்பட்டோரை உள்ளூர்க் கண்காணிப்பாளராகப் பயன் படுத்தவுள்ளது. அதேநேரம், சீ. எம். ஈ. வி. சுமார் நான்காயிரம் பேரை ஈடுபடுத்தவுள்ளது.

MONDAY, APRIL 05, 2010


பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம்ஜனாதிபதியினால் நியமனம்;;இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார்.
இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர்.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.
இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது.
ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.


Sunday, April 4, 2010

13-வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் - ஊடகவியலாளர் மாநாட்டில் வரதராஜப்பெருமாள் தெரிவிப்பு

SUNDAY APRIL 04, 2009
13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஆரம்பமாக வைத்து அதிகார பரவலாக்கல் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆட்சி யாளர்கள் வழங்கவேண்டும் என வடக்குக் கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்வியாளர்கள், வர்த்தகர்கள், பத்திரிகை யாளர்கள், அரச ஊழியர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.
யாரும் எதையும் சும்மா தரமாட்டார்கள். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தங்களு டைய நலன்களுக்கூடாகவே எமக்கு உதவு வார்கள். எமக்கு நன்மை செய்ய முன்வருபவர்களுடன் இணைந்து எமது சமுதாயத்தை முன்நோக்கி நகர்த்த வேண்டும். வன்முறைகளால் பலன் இல்லையயன கண்டு கொண்டோம்.
கடந்த காலங்களில் போரினால் எமது மக்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதுடன் 4 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இழப்பும் ஏற்பட்டது.இதனால் எமது சமூகம் ஒரு தலைமுறை பின்னோக்கித் தள்ளப்பட்டது. தென்னிலங் கையுடன் ஒப்பிட்டால் தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்ந்த ஏனையவற்றில் 60 ஆண்டுகள் பின்னோக்கியுள்ளோம். எனவே எல்லா தளங்களிலும் முன்னேற்றம் அடையவேண்டும்.
எமது மக்கள் மூளைப்பலசாலிகள். கடு மையான உழைப்பாளிகள். எனவே அறிவுப் பலமும், கடுமையான உழைப்பும் உள்ள சமூகம் பின்னேக்கியிருக்கக்கூடாது. எமது மக்களில் 8 இலட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் தரவி ருக்கும் உதவிகளைக் கொண்டு எங்கள் பிரதேசங்களை வளம் பெறச்செய்வோம். யாருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிலைநாட்டச் செய்வோம். சகல இன மக்களும் சமத்துவமாக வாழுவோம். யாரையும் பழிவாங்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் யாருக்கும் தலைகுனிய மாட்டோம்.
இன நெருக்கடிக்கு சிங்களவர் இடமளியார்கள்
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் உலக நாடுகள் இலங்கையை கண்டு கொள்ள வில்லை. ஆனால் இப்போது இலங்கையின் ஒவ்வொரு அசைவையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கிறது. தமிழ்-சிங்கள இன நெருக்கடி மீண்டும் ஒரு முறை ஏற்பட சிங்கள மக்கள் இனி இட மளிக்கமாட்டார்கள்.
எனவே பிரிவினை வேண்டாம். சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவும் வேண் டாம் அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். எமது மக்களின் நியாயமான கோரிக்கை களை சிங்கள மக்களின் மனச்சாட்சியை தொடக்கூடிய வகையில் விடுக்கவேண்டும். எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் வேறெந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக் களுக்கும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் தவறு செய்து விட்டோம் இனியாவது தவறு செய் யாமல் இருப்போம்.
வடக்கு, கிழக்கை இணைப்பது தவறில்லை
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது இலங்கைக்கோ அல்லதுசர்வதேசத்திற்குகோ பாதகமான நடவடிக்கையல்ல. அதனை நாம் நம்பவைக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச்சட்ட மூலம் ஒரு ஆரம்பப்படியாக இருக்கலாம். அதிலிருந்து அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டு அதில் ஒவ்வொரு சரத் திற்கும் விளக்கங்கள் கூறப்பட வேண்டும்.
இத்துடன் மத்திய அரசாங்கம் ஒரு சில அதிகாரங்களைத் தவிர ஏனையவற்றை மாகாணங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஈ.பி.ஆர். எல்.எப். பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் சிறிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நவரட்ணராஜா, உறுப்பினர் கங்கா உட்பட்டோர் கலந்து கொண்டனர்

Followers

Blog Archive