Wednesday, November 10, 2010

ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் விசாரணை நடத்துமா?

Wednesday, November 10, 2010
கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொது மக்கள் கண்ணீர் மல்கச் சாட்சியம் அளித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு எனப் பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள்மூலம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் ஆயரினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படுமென ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் வாக்காளர் பதிவு நிறைவுறும் நிலையில்.

Wednesday, November 10, 2010
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 90 வீதமான வாக்காளர் பதிவுகள் இதுவரை பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ எஸ் கருணாநிதி எமக்குத் தெரிவித்தார்.

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கிராம உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை.

Wednesday, November 10, 2010
தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துகளை ஏற்கனவே இறக்குமதி செய்து விநியோகித்திருந்தவர்க ளிடமிருந்து நஷ்ட ஈடுகளையும் சுகாதார அமைச்சு அறவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜயசேக்கர சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெண்டர் மூலம் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முதலில் தரமான மருந்து வகைகளை மாதிரிகளாக காண்பி த்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் போது தரக்குறைவான மருந்து வகைகளை விநியோகித்தும் உள்ளன.

இதனால் இந் நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக நஷ்ட ஈடுகளை அறவிட்டும் உள்ளோம். அத்துடன் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வது இனியும் கண்டுபிடிக்க ப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார்.

அத்துடன் தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் விடயத்தில் டெண்டர் சபையின் அதிகாரிகள் எவரேனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 12,030 பேர் கைது.

Wednesday, November 10, 2010
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, November 8, 2010

கங்காராம விகாரை சமய வைபவங்களில்;;;; ஜனாதிபதி!

Monday, November 8, 2010
ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்டட தான சமய வைபவம் நடைபெற்றது.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து இன்று அதிகாலை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை நோக்கி பெரஹர ஊh;வலம் நடைபெற்றது. நேற்று முழு இரவூம் பிரித் பாராயணம் நடைபெற்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கா; வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரோவூம் இந்த வைபவத்தில் கலந்துகொண்டாh;.

ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி வண. கலபொட ஞானதிஸ்ஸ தேரர் இங்கு உரை நிகழ்;த்துகையில்:

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது அமைதியான சூழலில் தத்தமது கடமைகளில் நிம்;மதியாக ஈடுபடக்கூடிய சந்தாப்பம் வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும் என்றாh;.

பொன்சேகா விடுதலைகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது முறுகல்!

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் வைத்துப் பொலிசார் சிலர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலர் இந்தச் சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் 'ஜெனரலுக்காக இராணுவத்தினர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத சில நபர்களால் குழப்பநிலை ஏற்பட்டது.

வெலிக்கடைச் சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை ஆரம்பம்.

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் கெனத் பெர்னண்டோ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் டி சில்வா குறிப்பிட்டார்.

மோதலுக்கான காரணம் தொடர்பாக இந்தக் குழுவினால் பல பிரிவுகளினூடாக ஆராயப்பட்டு அறிக்கையொன்று பெறப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை இந்த மோதல் தொடர்பாக இரகசிய பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் குழு நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை மோதலில் காயமடைந்த 14 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Friday, November 5, 2010

புலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்தனர் நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்.

Friday, November 5, 2010
பொதுமக்களுக்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்திய போதிலும், அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும் இரண்டறக் கலந்திருந்தார்களென்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களென்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (04) சாட்சியம் அளித்த போது திருமதி சுகுமார் குறிப்பிட்டார்.

புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்களென்று கூறிய யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு இராணுவத்தினரின் பகுதிக்குத் தப்பி வந்தார்களென்றும் குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் தப்பி வந்த மக்கள் எவரையும் இராணுவம் சுடவில்லையென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘வெள்ளைக் கொடியுடன் இராணுவத் தினரிடம் தப்பி வந்த அனைவரும் இன்னமும் உயிருடன் வாழ்கிறார்கள்.

வேண்டுமானால் அவர்களுள் சிலரை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து சாட்சியமளிக்கவும் இயலும். நான் எப்போதும் மக்களுடன் வாழ்கிறேன். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்கிறேன். மக்கள் எவராவது அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – 7 ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் நேற்று நடந்த ஆணைக்குழு விசாரணையில் சாட்சியம் அளித்த அரச அதிபர் இமெல்டா சுகுமார்,

ஜனவரி 19 ஆம் திகதி (2009) இராணுவக் கட்டளையிடும் அதிகாரியிடமிருந்து எனக்கோர் அறிவிப்பு தொலைநகல் மூலம் வந்தது. அதில், வள்ளிபுனம் பகுதியில் மக்களுக்குப் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்துமாறு வரைபடத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அறிவிப்புச் செய்தேன். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே புலிகளும் செல்வார்கள்.

நாம் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த பொழுது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா (நெடுங்கேணி), கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,50,000 பொதுமக்கள் அங்கு இருந்தார்கள். இறுதிவரை மக்கள் நம்பிக்கையுடன் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தார்கள். புதுக்குடியிருப்பில் தற்காலிக அலுவலகத்தில் நான் இயங்கிய பொழுது எம்மை வெளியேறுமாறு இராணுவம் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 22ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை போர் நிறுத்தம் செய்து நாம் வெளியேற அவகாசம் வழங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் அங்கிருந்து ஒட்டுசுட்டானுக்கு இடம்பெயர்ந்தேன். ஆனால் எனது உத்தியோகத்தர்கள் பலர் மக்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

அவரின் சாட்சியம் நிறைவடைந்ததும் ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் அரச அதிபரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதில் அளித்த அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அரச நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் ஆனால், அதில் 80% மட்டுமே மக்களைச் சென்றடைந்ததாகவும் 20% உணவைப் புலிகள் எடுத்திருக்கலாமென்றும் கூறினார்.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் 5, 6 கிராம சேவை உத்தியோகத்தர்களும் தமது உத்தியோகத்தர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இறுதி நம்பிக்கையுடன் மக்கள் கொண்டு சென்ற இலட்சக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீற்றர் தூரத்திற்கு எரியுண்டு கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்புக்காவலில் உள்ளோர் பட்டியல் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் தயாரிப்பு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விரைவில் கையளிப்பு.

Friday, November 5, 2010
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் பட்டியலொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தயாரித்து வருவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

இந்தப் பட்டியல் விரைவில் தமக்கு வழங்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டவர்களும் படையினரிடம் சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓமந்தை தடுப்பு முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, அவர்களின் விடுதலை, சட்ட நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பெயர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியலையும் வழங்கியிருந்தார். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான பட்டியலொன்றைத் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தயாரித்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

Thursday, November 4, 2010

ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

Thursday, November 4, 2010
ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

இந் நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சம்பந்தன் எம்.பியுடன் சந்திப்பு தமிழர்களின் உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் ஒரே நிலைப்பாடு.

Thursday, November 4, 2010
தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பி.யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த ஜுலை மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியையும் நேற்று சம்பந்தனிடம் கையளித்தோம். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதி, நேரம் மற்றும் இடம் பற்றி அறிவிக்குமாறு அவரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஈ. பி. டி. பி. அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பான மகஜரொன்றை அரசாங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இந்த மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் கூடவுள்ளது.

ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து டிசம்பருக்குள் திட்ட வரைபொன்றை தயாரிப்பது பற்றியும் நேற்றைய அரங்கக் கூட்டத்தில் ஆராய்ந்தோம்.

இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை அரங்கத்தில் இணைத்துக் கொள்வது பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார்.

நேற்றைய சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ. பி. ஆர். எல். எவ். நாபா அணிச் செயலாளர் தி. ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஆர். ராகவன், எஸ். சதானந்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், துணைச் செயலாளர் ப. நித்தியானந்தம், சிறி ரெலோ சார்பில் ப. உதயராசா, கு. சுரேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் என். குமரகுருபரன், ஈழமக்கள் ஏதிலியர் அமைப்பின் சார்பில் செ. சந்திரஹாசன், ரெமிஜியஸ் சிறிகுமார், டி மாணிக்கவாசகர், மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த மேகலா சண்முகம், யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, சந்திரமோகன், அங்கயற்கன்னி ஆகியோர் பங்குகொண்டனர்.

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- கத்தோலிக்க பேராயர்கள் சாட்சியம்.

Thursday, November 4, 2010
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.

கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையினர் நேற்று (03) நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிய மளித்தனர்.

வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்ட பேராயர், அதன் மூலம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுமென்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சிங்களமும் தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியலமைப்பில் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியமளிக்கையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார். தேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளால்

கொல்லப்ப ட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சட்டத்தரணி சமில் பெரேரா சாட்சியமளிக் கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டுள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கிவிடலாமென்று ஆலோசனை தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பதிகளில் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில், வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம் கையளிகக் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால், பெறுமதியான விவசாய நிலங்கள் வீணாகுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். முல்லைத்தீவு, நந்திக் கடல் பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

சம்பூர் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதுடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு அவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருட்தந்தை ரஞ்சித் மதுராவல சாட்சியமளிக்கையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீராக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சாட்சியத்தின் நிறைவில் குறுக்கு விசாரணை செய்த ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறியதோடு, அது தொடர்பில் சட்த்தரணி சமில் பெரேராவின் கருத்தினைக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சட்டங்களை நீடிப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுவதாகக் கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான முதற்படியாக குறைந்தது அவசரகாலச் சட்டத்தையாவது நீக்க வேண்டுமென்றார்.

நிறைவாகக் கருத்துரைத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும் நாம் ஆதரித்ததில்லை. இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்தோம். ஆனால், அடிப்படையில் இரு தரப்பிற்கும் நம்பிக்கை இல்லாததால் அது பலனளிக்கவில்லை’ என்றார்.

Tuesday, November 2, 2010

Tuesday, November 2, 2010

பத்மநாபா ஈழமக்கள் புரசீகர விடுதலை முன்னணியினரின் சர்வதேசிய பிராந்திய மகாநாட்டில் கலந்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள்...........சுவிஸ் நாட்டிற்கு விஐயம்.

பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டினை நிறைவு செய்து கொண்டு அங்கு விசிக்கும் தமிழ் மக்களை காண பிரான்ஸ் ஜெர்மன் சுவிஸ் நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார் தோழர் அவர்களை புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் மக்கள் சந்தித்து உரையாட அனைத்து நாடுகளிலும் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்படிருந்தது அது போலவே சுவிஸிலும் குறிப்பாக பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் ஒழுங்குகள் அமைக்கட்டிருந்தது மக்கள் தோழர் வரதராஐபெருமைளை பல பொது நலத்தை விரும்பிய மக்கள் வந்திருந்தனர் தோழரை காண மக்கள் ஆர்வத்துடன் சமூகம் தந்திருந்தினை காணக்கூடியதாகவிருந்தது தோழர் வரதராஐப்பெருமாளிடம் மக்கள் தங்கள் மனதிலிருந்நெடுகாலமாக பதில்தெரியாத கேள்விகளுக்கு தெளிவான கருத்தான பதில்களை அறிந்து தெளிவுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் நீண்ட காலத்திற்கு பிறகு ஓரு தெளிவான பதில் தரும் மனிதனை சந்தித்த திருப்தியோடும் மன மகிழ்ச்சியுடனும் சென்றனர் மக்கள் மனதிலிருந்த கேள்விகளுக்கு தோழர் அவர்கள் மிகமிக தெளிவான கருந்துக்களை வழங்கியமை தோழர்கள் மத்தியிலும் மக்கள் மத்திலும் மனநெகிழ்வினை தந்தது.

மக்களிடமிருந்துபிறந்த ஓரு சில கேள்விகளை உங்கள் மத்தியில் தருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம

(1)வடக்கு கிழக்கு சரியான முறையில் இணைக்கப்படவேண்டுமா?
(2)நாடுகடந்த தமிழீழம் என்றான் என்ன?
(3)அரசாங்கத்தின் தற்போதய தீர்வுத்திட்டம் என்ன?
(4)இலங்கை நாட்டில் தமிழ்மக்கள் மத்தியில் ஈபிஆர்எல்வ் கட்சியின் பொதுவா கருத்து என்ன?
(5) மக்களுக்கான தீர்வு திட்டத்தை ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் பெற்று தருவார்களா?
(6) ஈழ தமிழ் மக்களின் நிதந்தர தீர்வுத்திட்டத்திற்கான அண்டய நாடான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள் மிகவும் ஆணித்தரமான பதில்களை மிகமிக தெளிவான முறையில் விரிவு படுத்தியிருந்தார் நாங்கள் என்றுமே பழிஉணர்ச்சியுடன அலைபவர்கள் இல்லை நாம் என்றுமே மக்களுக்காகவே குரல் கொடுக்கும் அமைப்பாகவே இருந்து வருகிறது க.பத்மநாபாவின் அழியாப் புகழ் பெற்ற வாக்கியமாகிய என்றுமே நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம் கருத்து மிக்க வாக்கியத்தை தெரிவித்திருந்தார்....

தோழமையுடன்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி சுவிஸ் கிளை

பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.

புலிகள் எமக்கு செய்த கொடுமைகளுக்கெதிராக பழிவாங்கும் போக்கு கூடாது ஜெர்மன் ஸ்ருட்கார்ட் நகரில் - முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள்!
Tuesday, November 2, 2010
30-31 ஆகிய இருதினங்களில் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றையதினம் இந்நிகழ்வுகளில் ஐரோப்பிய ஈ.பி ஆர்.எல் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வரதராஜப்பெருமாள் அவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வரதராஜப்பெருமாள் அவர்கள் இலங்கை அரசியலும் தமிழர்களின் போராட்ட வழிமுறைகளும் இனி தமிழ்மக்கள் செய்யவேண்டிய விடயங்கள் என்ன என்பது பற்றி தனது உரையில் பல விடயங்களை தொகுத்து உரையாற்றியிருந்தார்.

தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை எப்படி ஆரம்பமானது பற்றியும் இனமுரண்பாடுகளின் தோற்றங்கள் பற்றியும் வரலாற்று சம்பவங்களுடன் எடுத்துரைத்தார். மன்னர்காலத்தில் அரசர்களுக்கான முரண்பாடுகள் இருந்தன தவிர தமிழ் சிங்கள இனமுரண்பாடுகள் இருந்திருக்கவில்லை. ஆனால் தமிழ்சிங்கள இனமுரண்பாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றதாக கூறப்படுவது தவறு என்றார். வாக்குரிமை எப்போது இலங்கையில் கொண்டு வரப்பட்டதோ அப்பொழுதிருந்தே இனமுரண்பாடுகளுக்கான கூறுகள் ஆரம்பமாகிவிட்டன. பின்னர் கொண்டுவரப்பட்ட தினச்சிங்கள சட்டம், விவாசாய குடீயற்றம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட குடியேற்றங்கள் தமிழர்கள் தரப்பில் இருந்து இனமுரண்பாட்டை தோற்றுவித்தது என்றார். பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள், 50க்கு 50, சமஷ்டிக்கோரிக்கை போன்ற அரசியல் விடயங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்த அவர் தமிழரசுக்கட்சியின் தவறும் அவர்கள் தமது வாக்குவாக்கியை தமது நலன்களுக்காக உபயோகித்தததையும் சுட்டிக்காட்டியிருந்தார்

தமிழர் தரப்பில் இலங்கை அரசுகளினால் கிடைக்கப்பெற்றதை உரியநேரத்தில் பெற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்து மறுதலித்தது ஜீ.ஜீ காலத்தில் இருந்து பிரபாகரன் காலம் வரைக்கும் நடைபெற்ற ஒன்றாகும். தனி அரசு கோரிக்கைக்கான ஊற்று தமிழரசு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ஏற்பட்ட ஒன்றாகும். 70க்கு பிற்பாடு தமிழரசுகட்சியினர் ஊட்டிவளர்த்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான அரசியல் இளைஞர்களை ஆயுதப்போராட்டத்திற்கு வழிவகுத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தமிழத்தேசிய அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. பெடியங்கள் விடமாட்டாங்கள், ஆயுதம் எடுப்பாங்கள், துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது என வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கள் இளைஞர்களை ஆயுதம் எடுத்துப்போராடத்தூண்டியது. 1974ம் ஆண்டு வரை தமிழீழம் என்கிற சொல் இருக்கவில்லை. 1977ல் அது அறிமுகப்படுத்தப்பட்டது. என்றார்

தமிழ் இளைஞர்கள் அனுபவித்த சிறைவாழ்க்கைகள் அதனால் ஏற்பட்ட போராட்டஎழுச்சிகள் ; 83ல் ஏற்பட்ட இனக்கலவரம் என்பன பற்றி எடுத்துரைத்த வரதராஜப்பெருமாள் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாண சபை ஆகியவை தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்துக்களை தெளிவாக குறிப்பிட்டார். இந்திய அரசு எமக்கு வழங்கிய ஆதரவை தமிழ்மக்களின் அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியாத நிலையையும் புலிகள் சகலதையும் மறுதலித்து குழப்பியடித்ததையும் சுட்டிக்காட்டினார். புலிகள் ஒவ்வொரு தடவையும் காப்பாற்றப்பட்டு வந்ததை குறிப்பிட்ட அவர் புலிகளின் தோல்விக்ககான காரணங்களை சம்பவங்களுடன் எடுத்துரைத்தார். வடமராட்சி தாக்குதலின்போது இந்திய அரசாலும் இந்திய ராணுவத்துடனான மோதலின்போது பிரேமதாசாவாலும், சந்திரிகா காலத்தில் நோர்வே அரசினாலும் புலிகள் காப்பாற்றப்பட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்தவருடம் புலிகள் சந்தித்த தோல்வியில் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. முள்ளிவாய்க்காலி;ல் அமெரிக்க அரசு கப்பல் அனுப்பி தம்மை காப்பாற்றும் என்கிற முயற்சியை நம்பியிருநத பிரபாகரனின் மரணத்துடன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததை குறிப்பிட்டார்

இனி என்ன செய்யவேண்டும்?. தமிழர்கள் ஏன் தோற்றார்கள்? பலிகள் ஏன் தோற்றார்கள்? தாம் சொல்வதைத்தவிர வேறு எதையும் கேட்கக்கூடாத என்கிற புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப்போக்குகளின் விளைவுகள் தமிழர்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?. இனியாவது தமிழர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். பல்வேறு கருத்துக்களை கேட்க வேண்டும்.அவற்றை கேட்கின்ற பொறுமையும் நாகரீகமும் வேண்டும். சமூகம் தோற்பதில்லை சமூகத்தின் மீள் எழுச்சி Nவையான ஒன்றாகும். தமிழ்மக்கள் ஒருமித்த குரலில் ஒலிக்கின்ற ஒற்றுமை வேண்டும். தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஒற்றுமையாக குரல் கொடுப்பதற்கான வெளிப்பாடு ஆகும். நியாயமான கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இலங்கை இந்திய முற்போக்கு சக்திகளுடன் ஒன்று பட வேண்டும். ஆயதம் ஏந்தி போராடுவதற்கான அவசியம் இனி இல்லை. தமிழ்கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை வேண்டும் என்றார்.

புலிகள் எமக்கு செய்த கொடுமைகளுக்கெதிராக பழிவாங்கும் போக்கு கூடாது. மக்கள் பலிகளை ஆதரித்த போக்கு தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பயத்தினாலோ ஏற்பட்டதொன்றாகும். அந்த மக்களை நாம் வென்றெடுக்க வேண்டும். இதற்கு தமிழ்கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும். கட்சி மாநாடுகள் அவசியம். மக்கள் மத்தியில:; இருந்து தலைவர்கள் வரவேண்டும். ஐரோப்பாவில் தேர்தலுக்கு முன் நடைபெறும் மாநாடுகள் உட்கட்சித்தேர்தல்கள் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்படுகின்றன. அதுபோல் எமது நாட்டிலும் இத்தகைய பண்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.

13வது திருத்தச்சட்டம் ஒரு ஓட்டைகள் அடைக்கப்பட்ட வாளிபோன்றது. அது ஒரு தற்காலிக தீர்வு. அதனை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. பார்ப்பதற்கு இந்திய யாப்பு போல இருக்கும். நிரந்தரமான ஒரு மாற்றம் அதில் கொண்டு வரப்படவேண்டும். ஒவ்வொரு சரத்திற்கும் அதிகாரப்பகிர்வு சார்பாக அர்த்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் 13வது 18வது சட்டங்கள் தொடர்பாக அரசியல் விளக்கங்களை முன்வைத்த அவர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்தார்.

குறுகிய நேரம் என்றாலும் முக்கியமான விடயங்கள் அவரால் பேசப்பட்டன. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் மரண அச்சுறுத்தல்கள் இன்றி மிரட்டல்கள் இன்றி சுதந்திரமாக உரையாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. புலம்பெயர் மக்கள் மத்தியில் இதுபோன்று சுதந்திரமான கருத்துப்பரிமாறல்கள் உருவாக வேண்டும். இதுவரைகாலமும் புலிகளின் கருத்துக்கள் தவிர மாற்றுக்கருத்துகள் பகிரங்கமாக முன்வைக்கப்படுவதற்கான சூழல் மிகக்குறைவாகவே இருந்தது. புலிகள் தவிர்ந்த மாற்றுக்கட்சித்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் மக்;களைச் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே இருந்தன. தற்போது அத்தகைய நிலை இல்லை. தற்போது உருவாகியிருக்கும் இத்தகைய சுதந்திரமான சூழல் தமிழர்களுக்கான நியாயமான போராட்டத்திற்கான வாய்ப்பாகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!

Tuesday, November 2, 2010
அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் விரைவில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழத் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் சிவாஜிங்கம் கொழும்பு ஆங்கில நாளேடுக்கு தெரிவித்தபோது புதிய அரசியல் கூட்டணி கூட்டுத் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும். ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா EPRLF , சித்தார்த்தன் தலைமையிலான புளொட், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டணி செயற்படவுள்ளது. கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இதுபற்றி எம்முடன் பேசியுள்ளது. இந்தக் கூட்டணிக்கான பெயர் குறித்து நாம் விரைவில் முடிவு செய்யவுள்ளோம்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

பூட்டான் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!

Tuesday, November 2, 2010
பூட்டான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஐவரைக் கொண்ட குழு நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி குழு இலங்கை வரவுள்ளது.

பூட்டான் தேசிய கவுன்சிலின் தலைவர் நம்கி பென்ஜோவை தலைமையாகக் கொண்ட இக்குழு நாளை மறுதினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளது.

தனது வருகையின் போது பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை குழு சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Thursday, October 28, 2010

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்!


சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்குவிஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!

தோழர் வரதராஐப்பொருமாள் அவர்களை சுவிஸ் நாட்டில் பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேர்ன் மானிலத்தில் 31.10.2010 காலை 10.00முதல் 13.00 மணிவரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
mattenhof str 32
3007 Bern
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!!பேர்ன் தொடர்புகட்கு!!!
0041798117280 Bern
0041797541317 Bern
0041786859598 freiburg
0041783130889 Bern
சூரிச் மானிலத்தில் 31.10.2010 பிற்பகல் 15.00முதல் 18.00 வரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
widmer str 100
8038 zürich
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!! சூரிச் தொடர்புகட்கு!!!
0041792613331 zü
0041797538517 Ag
0041764061799 Ag
0041783164174 வஸ்
பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.

சந்திரிகா கொலைமுயற்சி வழக்கு எதிரிக்கு 290 வருட கடூழியச்சிறை!

Thursday, October 28, 2010
1999ஆம் ஆண்டு கொழும்பு நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்த லின் இறுதிக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்ட நபருக்கு 290 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விதித்தார்.

கொழும்பு நகரசபை மண்டப வளவில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்ற வழக்கில் கொழும்பு நீதிமன்றம் சத்தியவேல் இலங்கேஸ் வரன் (வயது 30) என்கிற இளை ஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வின் கண் ஒன்று பறிபோனது. பிர திப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி ஒருவர், பெளத்த பிக்கு ஒருவர், சிவிலியன்கள் ஆகி யோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பந்தமாக நால்வருக்கு எதிராக கொழும்பு நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டு 2002ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி குற்றப்பத்திர மும் தாக்கல் செய்யப்பட்டது. வேலாயுதன் வரதராஜா (உத யன்),சத்தியவேல் இலங்கேஸ்வரன், பூசகர் எஸ்.ரகுபதிசர்மா, பூசகர் ரகு பதிசர்மாவின் மனைவி சந்திரா ரகு பதி ஆகியோரே வழக்கின் எதிரிகள். இத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினர். 26 பேரின் மரணங்களுக்கும் 80 பேரின் படுகாயங் களுக்கும் காரணமாகினர்.நாட்டின் முதல் பிரஜையை கொல்லச் சதித் திட்டம் தீட்டி இருந்தனர். ஆகியன உட்பட 110 குற்றச்சாட்டுக்கள் இவர் கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

எதிரிகளில் ஒருவரான இலங்கேஸ் வரன்,அவருக்கு எதிரான குற்றச்சாட் டுக்களை ஒப்புக்கொண்டு விட்டார். இத் தற்கொலை தாக்குதலுக்கு தேவையாக இருந்த வெடிகுண்டை புத்தளத்திலிருந்து முஸ்லிம் வர்த் தகர் ஒருவருடைய வாகனத்தில் கொழும்புக்கு கடத்திவந்தார் என்று நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச தண் டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இவ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரி.எம்.பி.வி.வெரவெல இவ ருக்கு நேற்று 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில விஜே வர்தன ஆஜராகி வாதாடி வருகிறார். இவ் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ரவீந்திர டீ சில்வா ஆஜராகினார்.

விளம்பரப் பலகை பொருத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை!

Thursday, October 28, 2010
கொழும்பு நகரில் விளம்பரப் பலகைகளை பொருத்தவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.முன்னர் இதற்கான அனுமதிகளை கொழும்பு மாந கரசபை வழங்கி வந்தது.

இனிமேல் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கான விண்ணப்பங் களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் என கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஓமர் காமிலுக்கு உயர் மட்டத்தி லிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரை கிடைத்த பின்னரே பாது காப்பு அமைச்சு அனுமதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையினால் கொழும்பு மாநகரசபைக்கு கிடைத்து வந்தவருமானம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் உள்ள சகல பாதுகாப்பு காவலரண்களை யும் அகற்றும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன.

கொழும்பு நகர எல்லைக்குள் இருக் கும் ஏனைய காவலரண்கள் அனைத் தும் அடுத்த சில தினங்களில் அகற்றப் படவுள்ளன எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை யாழில் நான்கு நாட்கள் நடைபெறும்!

Thursday, October 28, 2010
கற்றுக்கொண்ட பாடங்கள் மற் றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணை க்குழு யாழ்ப்பாணத்தில் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பெற் றுக்கொள்ளவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்வினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றம் நல்லி ணக்க ஆணைக்குழு நாட்டில் பல் வேறு தரப்பினரிடம் இனப்பிரச்சினை, போரின் பாதிப்புக்கள் குறித்து சாட்சியங்களைப் பெற்றுவருகிறது.

யாழ்.மாவட்ட மக்களிடம் எதிர் வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு செயலகபிரிவு குருநகர் கலாசார மண்டபத்திலும், முற்பகல் 11.30 மணிக்கு நல்லூர் பிரதேச செய லக பிரிவு மக்களிடம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்ட பத்திலும், பி.ப. 2.00 மணிக்கு கோப் பாய் பிரதேச செயலக மக்களிடம் நீர் வேலி கிராம அபிவிருத்திச் சங்க மண் டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய் யப்படவுள்ளது.மறுநாள் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை, உடுவில் பிரதேச செயலகபிரிவு மக்களி டம் அளவெட்டி மகாஜனசபை மண்ட பத்திலும் மாலை 4.00 மணிக்கு சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் காரைநகர் பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சித்தன்கேணி மகளிர் அபிவிருத்தி சங்க மண்டபத்திலும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதிகாலை 9.00 மணிக்கு பருத்தித்துறை மரு தங்கேணி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் குடத்தனை தேவா லயத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் நெல்லியடி முருகன் கோயிலிலும் மாலை 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.

இறுதி நாளான எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் ஊர்காவற்றுறை புனித அந்தோ னியார் தேவாலயத்திலும்,மாலை 4.30 மணிக்கு வேலணை பிரதேச செயலக பிரிவு மக்களிடம் மண்கும் பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

Tuesday, October 26, 2010

பிரான்சில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில்-சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்!

பிரபாகரனின் மரணம் முதற் தடவையாக இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Tuesday, October 26, 2010
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரதான குற்றவாளியென குற்றம் சுமத்தப்பட்டிருந்த புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக ஒப்புக்கொண்ட இந்தியா, அவரின் பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும் சென்னையில் அவர் மீது தொடரப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் வழக்கின் பிரதான குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மன் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன் தோழர்களுக்கு உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும் - தோழர் மோகன்!

Tuesday, October 26, 2010
வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் கட்சியின் பிராந்திய மாநாடு ஒன்றை நடாத்துவது உண்மையில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விடயம்.

ஆயுதப்போராட்டம் தீவிரம்பெறத் தொடங்கி 30 வருடங்கள் கடந்துவிட்டது.

எமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை தடைசெய்வதாக அறிவித்து புலிகள் எம்மீது தாக்குதல் நடாத்தி 24 வருடங்கள் கடந்துவிட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் கட்சியின் முதுகெலும்பாகச் செயற்பட்ட முன்னணித் தோழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்து, கட்சியின் ஆசானும், வழிகாட்டியுமான செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களை 20 வருடங்களுக்கு முன்னரே பறிகொடுத்த பின்னரும் எங்கள் கட்சி தன் பயணத்தை இன்றுவரை முன்னெடுத்துச் செல்வதற்கு தோழர்கள் ஒவ்வொருவரும் கொண்டுள்ள மன உறுதியும், அரசியல் ரீதியான புரிதலும், சமூகம் பற்றிய அக்கறையுமே காரணமாகும்.

கடந்த 30 வருடங்களிலும் எங்கள் தோழர்கள் அனுபவித்த கஷ்டங்கள் சந்தித்த பிரச்சினைகள், முகங்கொடுத்த நெருக்கடிகள் எத்தனை! எத்தனை! இன்றைக்கு வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் பயிற்சி முகாம்களிலும், மக்களின் மத்தியிலும் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் கட்சியை நிலைநிறுத்துவதற்காக செய்த அர்ப்பணிப்புக்கள் எத்தனை! எத்தனை!

பிரான்ஸ் மாநாடு கட்சியின் வெளிநாட்டுக் கிளைகளின் கடந்தகால வேலைத் திட்டங்கள் தொடர்பாக மீள்பரிசீலனை செய்வதுகொள்வதுடன். இலங்கையில் சம கால நிலமைகள், மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை இலக்காகக் கொண்டு கட்சி எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராய்ந்து முடிவுகளையும் எடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உயரிய நோக்கங்களோடு பிரான்ஸில் நடைபெறும் வெளிநாடுகளில் உள்ள கட்சித் தோழர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு எங்கள் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இது கட்சியின் ஏனைய பிராந்தியங்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் கட்சியின் செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும் அமைய வேண்டும் அமையும் என்று நம்புகின்றேன். இந்த மாநாடு வெற்றி பெற யாழ் பிராந்திய தோழர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்பிற்கினிய தோழர்களே!

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ள நீங்கள் அனைவரும் இங்குள்ள நிலவரங்கள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

1986 மார்கழி 13 ஆம் திகதி புலிகள் எம்மீது தாக்குதல் தொடுத்ததற்கு முன்னர் இருந்தது போன்ற ஒரு சூழல் இங்கு நிலவுகின்றது என்பது உண்மை. ஆனால், அந்த காலகட்டத்தில் எங்கள் இயக்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியல் பிரிவு என்றும், இராணுவப் பிரிவு என்றும் ஆயிரக்கணக்கான தோழர்கள் எம்முடனிருந்தார்கள். மகளிர்அணி, மாணவர் அணி, தொழிலாளர், விவசாயிகள் அணி என்று பல்வேறு முன்னணி அமைப்புக்கள் எம்மிடமிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வித எதிர்பார்ப்புகளுமற்ற பல்வேறு தரப்பு மக்களினதும் ஆதரவு எமக்கிருந்தது.

கடந்த 23 வருடங்களிலும் தமிழ் அரசியல் அரங்கில் நிலவிய புலிகளின் பாசிசம் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது. இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பாலானவர்கள் எமது கட்சியின் அரசியல் இலட்சியம், நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் சூழலில் நிலவிய அராஜகம், ஜனநாயக விரோதம், சுத்துமாத்துக்கள், இதுவரை கால இழப்புக்கள் பொதுவாகவே அரசியல் மீதான நாட்டத்தை தடுத்துவிட்டிருக்கின்றது.

கடந்த 30 வருடங்களிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் இயல்பாகவே மானியங்களையும், இலவச உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளையும் அதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர். மக்களின் இந்த இழி நிலையை அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பதற்கான மூலதனமாக்கும் மோசடியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த நிலையில் மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கும், அவர்கள் காலங்காலமாக தொழில் செய்துவந்த கடலில் மீண்டும் மீன் பிடிக்க செல்வதற்கும், பாதுகாப்பு வலங்களாயிருந்த வயல்நிலங்களில் விவசாயிகள் திரும்பவும் பயிர் செய்வதற்கும், இந்த நாட்டில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரசால் வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதற்கும், மக்களின் வரிப்பணத்தில் புனரமைக்கப்படும் கிராமத்து வீதிகளை செப்பனிடுவதற்கும் நாங்களே காரணகர்த்தாக்கள் என்று மக்களை மயக்குகின்ற போக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக புலிகள் மக்களின் விடுதலைக்கு போராடுவதாக மயங்கிப்போயிருந்த மக்கள் இப்போது இதுதான் அபிவிருத்தி என்று மயங்கிப்போயிருக்கிறார்கள். இது நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்காது என்பது மக்கள் வேலையில் அனுபவம் உள்ள உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இன்று இவற்றுக்கு மத்தியில் தான் நாங்கள் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

இளைஞர்களாக குடும்ப பொறுப்பை பெற்றோரிடம் விட்டுவிட்டு எமது இயக்கத்திற்கு தம்மை அர்ப்பணித்து எம்மோடு இணைந்த தோழர்கள் பலரும் இன்று பெற்றோர்களாக, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகடிகளை பயன்படுத்தி பல தோழர்கள் விலைக்கு வாங்கப்பட்ட, தொழில் வாய்ப்புக்களை தேடிச்செல்கின்ற சம்பவங்கள் நீங்களும் அறிந்தவையாகும். ஆட்பலத்திலும், நிதி பலத்திலும் நாம் பின்தங்கியவர்களாகவே உள்ளோம். இருப்பினும் எமது இலக்கில், இலட்சியத்தில் உறுதியும் எமது கருத்துக்கள் யதார்த்தமானவை, மக்கள் நலன் சார்ந்தவை அவற்றை முன்கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்குள்ளது.

இந்த வகையில் எங்களுடைய ஆரம்ப கட்டப் பணிகள் எங்கள் கருத்துக்களை பரவலாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுதல், சமகாலத்தில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல், அவற்றுக்கு தீர்வுகாண குரல்கொடுத்தல் என்பனவாகவே அமையும்.

அத்துடன் கட்சி வேலைகள் மற்றும் கட்சியின் முழுநேர உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நிதியை திரட்டுவதற்கு வருமானம் தரும் தொழில்முயற்சிகளை அடையாளம் கண்டு, மேற்கொள்வதும் எமக்கு மேலதிக கடமையாகவுள்ளது.

அடுத்ததாக உயிர் நீத்த தோழர்கள், ஆதரவாளர்களின் குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவதும் எமது கடமைகளில் பிரதானமானதாகும்.

இதே போன்று பொதுமக்கள் மத்தியிலும் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் மேம்பாட்டுக்காக சிறிய அளவிலான தனிப்பட்ட அல்லது சாத்தியமாயின் கூட்டான சுயதொழில் முயற்சிகளை ஏற்படுத்திக்கொடுத்தல். அத்தகைய குடும்பங்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களிலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஆலோசனைகளையும், தீர்மானங்களையும், நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கட்சியை பலப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும். இந்த மாநாடு சிறப்புற வேண்டும் என வாழ்த்தி நிறைவு செய்கின்றேன்.

அமரர் தோழர் பத்மநாபாவின் நாமம் நீடூழி வாழ்க

தோழமையுடன் -மோகன்

Followers

Blog Archive